அட்சய திரிதியை என்றால் என்ன?

0 114

“அட்சய திரிதியை “

மொதல்ல “சயம் ” என்றால் என்ன என்று பார்த்தால் “சயம் “என்றால் தேயறது, குறையறது என்று பொருள்

அட்சயம் என்றால் தேயாமல் வளர்வது, பெருகுவது என்று பொருள்.
வளர்ச்சி என்றும் கொள்ளலாம்.

திரிதியை திதி என்பது அமாவாசைக்கு பின்னாடி வரக்கூடிய மூன்றாவது திதி “திரிதியை திதி” ஆகும்.

பௌர்ணமி க்கு பின்னாடி வரக்கூடிய மூன்றாவது திதி திரிதியை திதி ஆகும்.

திதிகளில் இந்த திரிதியை திதி மிக விஷேஷமானது. சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு பின்னாடி வரக்கூடிய திரிதியை திதி “அட்சய திரிதியை” என்று அழைக்கப்படுகிறது
இந்த அட்சய திரிதியை நாளில் ஒளிக்கிரகங்களான சூரியனும், சந்திரனும் உச்சமாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அட்சய திரிதியை நாளில் எதை செய்தாலும் அது பெருகும், வளரும் என்பதால் இந்த நாளில் எல்லோரும் தங்கத்தை வாங்க விரும்புகின்றனர். தங்கம் வாங்குவது எல்லோராலும் இயலுமா என்றால் அது முடியாது.

அட்சய திரிதியை அன்று வேறு என்ன வாங்கலாம்?

எனவே தங்கம் வாங்க முடியாதவர்கள் அரிசி வாங்கலாம். அந்த வருடம் முழுவதும் அரிசிக்கு பஞ்சமே வராது. உப்பு வாங்கலாம். புத்தாடை எடுக்கலாம்.

வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கலாம். தான தருமங்கள் செய்யலாம். புண்ணியங்கள் பெருகும். தாய்க்கு காரகனான சந்திரனும், தந்தைக்கு காரகனான சூரியனும் உச்சம் பெறும் அட்சய திரிதியை நாளில் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கலாம்.

அட்சய திரிதியை நாளில் செய்யும் நல்ல காரியங்கள் ஒன்றுக்கு நூறாக பெருகும் & வளரும்.

நிகழும் மங்கள கரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 24 ம்நாள் செவ்வாய் கிழமை, சரியான ஆங்கிலம் ( 7.5.2019) அன்று “அட்சய திரிதியை “நாளாகும்

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More