சனி பெயர்ச்சி பலன்கள் கடக ராசி 2017 – 2020 | Sani Peyarchi Palangal Kataka Rasi

0 3,276

சனி பெயர்ச்சி பலன்கள் கடக ராசி 2017 – 2020

=========

திருக்கணிதப்படி :

==================

கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்

தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி :

=============

வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்

இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் ராசிக்கு 5 மிடத்தில் மந்த சனியாக இருந்து பல அசுப பலன்களான குழப்பம், உறுதியான முடிவெடுக்க முடியாத நிலை, அபவாதம், பொருள் இழப்பீடு, நஷ்டம், குடும்ப கவலைகள், பய உணர்ச்சி, குழந்தைகளின் படிப்பு செலவுக்கு சிரமமான சூழல், உடல் உபாதைகள் இப்படி சில பலனை கொடுத்து சிறப்பான காலம் என்று சொல்ல முடியாத வகையில் சென்றிருக்கும்

இனி சனிபகவான் அடுத்து உங்கள் ருண,ரோகம்,எதரி எனப்படும் ஆறாமிடத்தில் பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 8, 12, 3 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி ஏற்கனவே சந்தித்த கெடு பலன்கள் மாறி சுப பலன்களை அள்ளி வழங்க உள்ளார்

இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் யோக சனியாக இருந்து பல சுப பலன்களான எதிரி தொல்லை மறைய செய்வார், கடன் பிரச்சினைகள் முற்றிலும் தீரசெய்வார், நோய் நெடிகள் மறைய செய்வார் வருமானத்தை அதிகரிக்க செய்வார், கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்வார், அதிர்ஷ்டம் கூடி வரும் காலம், மகிழ்ச்சி, வெற்றி உண்டாகும், பட்டம் பதவி வழக்கு வெற்றி உண்டாகும் காலம். எனவே முயற்சி செய்து சாதகமான பலனை பெற்று கொள்ளுவும்

சனி பெயர்ச்சி பலன்கள் 2017 - 2020 | Sani Peyarchi 2017 Kataka Rasi
Sani Peyarchi 2017 Kataka Rasi

உடல் ஆரோக்கியம் :

======================

அடுத்த இரண்டரை ஆண்டுகளில் உடல் மன நல பிரச்சினைகள் முழுவதும் மறையும், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள சிறந்த காலம் ( முழு வெற்றி, விரைவில் குணமாகும்), வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கி இருப்பவர்கள் பூரண குணமாகி வீடு திரும்பும் காலம், கொடிய நோய் உள்ளவர்களுக்கு மருத்துவம் மூலம் நிவர்த்தியாக புதிய மருந்து / வழிமுறைகள் கிட்டும்.

பரிகாரம் :

தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும்,

.

உத்தியோகம் / வருமானம் :

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு / நல்ல இடமாற்றம் / பணி மாற்றம் / சம்பள உயர்வு / பதவி உயர்வு கிட்டும். வருமான வகையில் உற்சாகமான போக்கை காணலாம். எதாவது ஒரு வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும். சேமிப்புகள் உண்டாகும், தூர தேசத்தில் / வெளிநாட்டில் பணி கிடைக்கும், பட்டம் பதவிகள் தேடி வரும் காலம்

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

தொழில் / வியாபாரம் / வருமானம் :

======================================

தொழில் / வியாபாரம் பன்மடங்கு பெருகும், உற்பத்தி செய்த பொருட்கள் விரைவாக விற்று தீரும், பணப்புழக்கம் அதிகரிக்கும், வங்கி கடன் தொல்லைகள் தீரும், நெடு நாட்கள் இருந்த பாக்கிகள் வந்து சேரும். தொழில் / வியாபாரம் விரிவு படுத்தும் கால கட்டமாக இருக்கும். கடல் கடந்து வியாபாரம் சிறக்கும். வெளிநாடு ஆர்டர்கள் குவியும், பல தொழில் / வியாபாரம் செய்யும் வாய்ப்புகள் தேடி வரும். ஏற்கனவே நிராகரித்தவர்கள் தேடி வந்து ஆர்டர் கொடுப்பார்கள், புதிய பொருள் கண்டுபிடித்து சந்தை படுத்தும் காலமாக இருக்கும். தொழிலாளர்கள் பிரச்சினைகள் சுமூகமாக தீரும்

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, அன்னதானம் செய்ய சிறப்பு

பெண்கள் :

==========

இளம்பெண்களுக்கு திருமணம் முடிவாகும், குடும்பத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும், வேலை தொழில் வியாபாரம் வெற்றி பெறும் காலம். உங்களுக்கு என இருந்த தனிப்பட்ட கடன் தீரும் காலம், பொன் நகைகள் சேரும், சேமிப்புகள் உயரும் ( நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்). அடகில் இருந்த நகைகள் மீட்பீர்கள், எதிரி தொல்லைகள் மறையும், வழக்குகளில் வெற்றி கிட்டும், நெடுநாள் நினைத்திருந்த / தடைபட்ட அணைத்து வேலைகளும் வெற்றி கிட்டும், உடம்பில் இருந்த நோய்கள் தீரும், ரத்த சம்பந்தமான தோல் வியாதிகள் முற்றிலும் குணமாகும், நெடு நாட்கள் மருத்துவமனையில் வைத்தியத்தில் இருந்தவர்களுக்கு குணமாகி வீடு திரும்புவீர்கள், கர்ப்ப பை சம்பந்தமான நோய்கள் நீங்கும், மாத விலக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரும்

பரிகாரம் :

ஈஸ்வரனுக்கு அர்ச்சனை, அம்மன் வழிபாடு, சனீஸ்வரன் வழிபாடு சிறப்பு

அரசியல்வாதிகள் :

===================

பதவி, பட்டம், புகழ் தேடி வரும் காலம், உங்கள் கண்ணுக்கு முன்னாடி இருந்த எதிரிகள் எல்லாம் ஓடி ஓளியும் காலம், எல்லா வேலையும் சுமூகமாக நடக்கும், ஏதாவது ஒரு வழியில் பணம் வந்து கொண்டே இருக்கும், பொறுப்பான பதவிகள் கிடைக்கும், இரண்டு பதவிகள் வகிக்கும் வாய்ப்புகள் வரும்

பரிகாரம் :

அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

விவசாயிகள் :

==============

விவாசாயிகளுக்கு பொற்காலமாக இருக்கும், வாங்கிய பயிர் கடன் வட்டி அடையும் காலம், பயிர்கள் விளைச்சல் அதிகரிக்கும், பணப் பயிரில் விளைச்சல் லாபம் அதிகரிக்கும். புதிய யுக்தியுடன் புது வகை பயிரிட வாய்ப்புகள் உண்டாகும் அதில் அமோக விளைச்சல் கிட்டி லாபம் உண்டாகும், சேமிப்புகள் உயரும், பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும் காலம்

பரிகாரம் :

குலதெய்வத்துக்கு பொங்கல் வழிபாடு, விளைச்சலில் ஒரு பகுதியை பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக கொடுக்க சிறப்பு

மாணவ மாணவியர்கள் :

==========================

உடன் நலம் தேறும், படிப்பில் இருந்த தடைகள் நீங்கும், கவனம் உண்டாகும், வெளிநாட்டில் ஸ்காலர்ஷிப்வுடன் தங்கி படிக்கும் வாய்ப்புகள் கிட்டும், ஆராய்ச்சி கல்விகள் அமையும், புதிய கண்டுபிடிப்புக்கள் செய்வீர்கள், உங்கள் அணைத்து முயற்சிகளும் வெற்றி பெறும், நீண்ட நாள் கண்டுபிடிப்புக்கள் வெற்றி பெறும் காலம் அதற்க்கு உரிய மரியாதை கவுரவம் பட்டம் கிட்டும், கல்வி தொடர்பான வழக்கில் வெற்றி பெறும் காலம், சலுகைகள் அதிகம் கிடைக்கும், மேல் கல்விகள் ஆராய்ச்சி கல்வியில் விரும்பிய துறை கிடைக்கும்

பரிகாரம் :

ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்

கலைஞர்கள் :

===============

அருமையான கால கட்டமாக அமையும், புதிய புதிய படைப்புகள் வெற்றி கவுரவம் தரும், வருமானம் பெருகும், புதிய கண்டுபிடிப்புக்கள், விரிவாக்கம் உண்டாகும். சிறந்த காலமாக இருக்கும், நெடு நாளைய கனவுகள் நிஜத்தில் வெற்றி பெறும்

பரிகாரம் :

சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்

மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.

எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்

நன்றி

வாழ்க வளநலமுடன்

Leave A Reply

Your email address will not be published.