மிதுன ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019

635

விளம்பி வருட பலன் மிதுன ராசி

மிதுன ராசி (65%)
============

இந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவானும்,சனி பகவானும் உங்கள் ராசியின் மீது பார்வை இருப்பதால்

💑 திருமணத்துக்கு காத்து கொண்டிருக்கும் இளவயது காரர்களுக்கு திருமணம் முடியும், நல்ல வரன் கூடி வரும், காதல் வெற்றி பெரும், குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும், வயது முதிர்ந்த கன்னிகளுக்கு திடீர் திருமணம் நடக்கும், பெண்கள் தாய்மை அடைவார்கள், கர்ப்ப பை சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்

🏠புதிய நிலம்/மனை/வீடு சேரும் காலம், குடும்பத்தில் சுப நிகழ்வுகள், மூத்த உடன் பிறப்புகளுக்கு சுப நிகழ்வுகள் உண்டாகும், ஆபரண அணிகலன்கள் சேரும் காலம்,

🛵🚗புதிய வண்டி வாகன வசதிகள் ஏற்படும்

📖 மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும், விரும்பிய துறை கிடைத்து சேரும் காலம்

⚖தொழில் அமோகமாக நடக்கும், உற்பத்திகள் பல மடங்கு பெருகும், வியாபரம் சிறக்கும், பலர் பொறமை படும் அளவுக்கு வளர்ச்சி பெறுவீர்கள்,வேலைக்கு காத்து கொண்டிருப்பவர்களுக்கு உடனடியாக நல்ல வேலை வாய்ப்பு கிட்டும், வெளிநாடுகளில் பணி புரிபவர்களுக்கு நிரந்தர விசா கிட்டும், சம்பள/பதவி உயர்வும் ஏற்படும் காலம்

🕉தூர புனித யாத்திரைகள் உண்டாகும், கர்மா தீர்க்கும் புனித பயணங்கள் ஏற்படும்

🔘புரட்டாசிக்கு பிறகு குருபகவான் சாதகமற்ற நிலையிலும் சனி பகவானின் பார்வை அதிகம் விழுவதால் குடும்பத்தில் குழப்பம், சண்டை சச்சரவு, உடல் உபாதைகள், வயதானவர்களுக்கு சர்க்கரை , இரத்த கொதிப்பு கட்டுக்கடங்காமல் போய் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும் அதிக மருத்துவ செலவுகள் ஏற்படும்,கடன் வாங்குவது கொடுப்பது முற்றிலும் தவிர்க்க பட வேண்டும், பண விஷயத்தில் மிகுந்த கவனம் வேண்டும், தேவையற்ற விஷயத்தில் கலந்து கொள்ள வேண்டாம், வியாபாரம்/தொழில்/வேலையில் போட்டி பொறாமை ஏற்படும், மந்தமான போக்கு நிலவும், உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும், மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய காலம், மணவாழ்க்கை பாதிப்பு உண்டாகும், இடமாற்றம் தொந்தரவு தரும்

பரிகாரம்
=======

ஆஞ்சநேயர் வழிபட சிறப்பு

நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு விளக்கிட்டு வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் துர்க்கையம்மன் வழிபாடு செய்யவும்

ஊனமுற்றோருக்கு அன்னதானம்,வஸ்திர தானம் செய்ய மிகுந்த சிறப்பு

மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொறுத்து மாற்றம் உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்

97901 26877
87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More