மேஷ ராசி விளம்பி வருட பலன்கள் 2018 – 2019

1,114

விளம்பி வருட பலன் மேஷ ராசி

மேஷ ராசி (75%)
============

இந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவானும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால்

💑 திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கூடி வரும், திருமணம் தள்ளி போனவர்கள் தகுந்த பறிகாரம் செய்து கொண்டால் திருமணம் விரைவில் கூடி வரும்,
குழந்தை பாக்கியம் உண்டாகும்

🏠நிலம்,புது மனை, வீடு, வாங்கும் யோக வாய்ப்புகள் உண்டாகும், வீடு விஸ்தரிப்பு, புனரமைப்பு ஏற்படும்

🛵🚗புதிய வண்டி வாகன வசதிகள் உண்டாகும், பொன் நகை ஆடை ஆபரண வாங்கி மகிழும் காலம்

📖மாணவ மாணவிகளுக்கு உயர்ந்த படிப்புகள் அமையும், விரும்பிய படிப்புக்கான இடம் கிட்டும், படிப்பு முடித்து வேலை தேடி கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும், பணியில் உள்ளாவார்களுக்கு பதவி உயர்வும்/சம்பள உயர்வும் கிட்டும், மேல் படிப்புகள்,ஆராய்ச்சி படிப்புகள்,வெளிநாடு செல்லும் யோகமும் கிட்டும்

⚖வியாபாரிகள், தொழில் செய்வோர் முன்னேற்றத்தையும், நல்ல வருமானத்தையும் பெறுவார்கள்,பழைய கடன்,பாக்கிகள் வசூலாகும்

🕉புனித யாத்திரை, உல்லாச பயணம் அமையும்

🔘புரட்டாசிக்கு பிறகு தொழில் வழியில் சுணக்கம்,வேலை இடமாற்றம்,மருத்துவ செலவுகள், தந்தையின் உடல் நிலையை பாதிக்கும், உங்களுக்கு வயிற்று சம்பந்தபட்ட பிரச்சினைகள், அறுவை சிகிச்சை உண்டாகும், மாணவ மாணவிகள் படிப்பில் அக்கறை கொள்ள வேண்டிய காலம், தேவையற்ற விஷயத்தில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய காலம்

பரிகாரம்
=======

பொங்கல் வைத்து குலதெய்வ வழிபாடு செய்ய சிறப்பு

நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கிட்டு வழிபாடு

முதியவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும்

மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொறுத்து மாற்றம் உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்

97901 26877
87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More