2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் தனுசு ராசி | 2017 New Year Rasi Palangal Dhanu Rasi

0 260

 

தனுசு  ( மூலம், பூராடம், உத்ராடம், 1–ம் பாதம் வரை  )
தனுசு  ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்

 

ராசி நாதன்   குரு  தசம   கேந்திரம்  எனும்  10 ல்  மற்றும்   10ம் அதிபதி புதன் ஜென்ம ராசியில்  என  பரிவர்த்தனை பெற்றிருக்க   தொடங்கும் இந்தாண்டு  உங்களுக்கு  தொழில், வியாபாரம்,  வேலை   போன்றவற்றிக்கான   சிந்தனை  மோலோங்கியிருக்கும்,  திடடமிட்டு  நிதானமாக  காரியங்களில் இறங்க,  தாமதித்தாலும்   வெற்றி  கிடைக்கும்.

 

இந்தாண்டு  விரயா சனி  மாறி  ஜென்ம  சனி காலம் துவங்கிறது,   புதிய  முயற்சிகள்,  செயலிகளில்  சற்று கவனம் தேவை, குடும்பத்திலும், பணிபுரியும் இடத்திலும் நண்பர்கள், உறவினர்களுடன்  கருத்து வேறுபாடுகள் உருவாக  வாய்ப்புண்டு என்பதால் வீண் வாக்குவாதம், மற்றவர்களின்  பிரசனைகளில்  தலையீடு  போன்றவற்றில்  கவனம் தேவை.

 

நம்பிக்கைக்குரியவர்  என்றாலும்  பிறருக்காக  ஜாமீன்  போடுவது,  பணம்  கொடுக்கல், வாங்கல்  போன்றவற்றை  ஆலோசித்து செய்தல் நலம்.

 

பலருக்கு  தொழில், வேலையில்  இடமாற்றம்  மற்றும்  தொழில்  போட்டியாளர்கள்  உருவாக  வாய்ப்புண்டு.    இடமாற்றம்  விரும்புபவர்கள்   புதிய வேலை வாய்ப்பு  உறுதியான  பின்பே  இருக்கும்  வேலையை  விடுதல் நலம்.  புதிதாக  வேலை தேடுவோருக்கு  வெளிநாடு, வெளியூர்  வேலைவாய்ப்புகளே  அதிகம்  வரும்.

 

சிலருக்கு  தொழில், வேலை    காரணமாக  குடும்பத்தினரை  தற்காலிகமாக  பிரிந்திருக்கும்  சூழ்நிலை  ஏற்படலாம்.

வீடு, நிலம், நகை  மூலம்  கடன்கள் எளிதாக கிடைக்கும்.

 

இந்தாண்டு  தொழில்,  வியாபாரம்  தொடர்பான  பயணங்கள் அதிகரிக்கும், பலருக்கு  வெளிநாடு  சென்று வரும் வாய்ப்பு  கிடைக்கும். வீண் அலைச்சல்,  உடல், மன சோர்வு அடிக்கடி  ஏற்ப்பட்டு விலகும். தியானம், யோக போன்றவற்றை கடைபிடித்து  வருவது நலம்.

 

புதிய நண்பர்கள், தொழில்  பங்குதாரர்கள்  உடன் கருத்து வேறுபாடுகள்  ஏற்பட வாய்ப்பு உண்டு, கூட்டு தொழில், முதலீடுகளில்  கவனம் தேவை.

 

தொலை தொடர்புத்துறை,  வெளிநாடு  தொடர்பு  வணிகம்,

கமிஷன்  அடிப்படையில்  செய்யப்படும் சிறு வணிகங்களால்  லாபம்  உண்டு.

 

மாணவர்களுக்கு  படிப்பில் சற்று கவனம்  தேவை,  மறதியும், சோம்பலும்  அடிக்கடி  ஏற்படும், முக்கிய பாடங்களில் கவனமாக  படித்து  வர  கவலை இல்லை

 

இந்தாண்டு  குரு பெயர்ச்சிக்கு பிறகு பொருளாதார  ரீதியாக  முன்னேற்றம்,  உயர் பதவியில் இருப்பவர்களின்  ஆதரவு,  பதவி, ஊதிய  உயர்வு, இடம் மாற்றம்   போன்ற   சாதகமான பலன்கள் அதிகம்  நடைபெறும்.

 

கவலையை  விடுங்கள், வளமான  எதிர்காலத்திற்காக  உழைக்கும் நேரமிது. இறையருளை  துணை கொண்டு  உங்கள்  முயற்சியை முன்னெடுத்து  செல்லுங்கள்.

 

உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து   நன்மையான  பலன்கள்  அதிகம் நடைபெறும்.

 

பரிகாரம்

வியாழக்கிழமைகளில் குரு பகவான்  வழிபாடு,   செவ்வாய்க்கிழமை  முருக பெருமான்  வழிபாடு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு  உணவளிப்பதும்  சிறந்த பலன்களை தரும்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More