2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி | 2017 New Year Palangal Mesha Rasi

0 256

மேஷம் ( அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை )

மேஷ  ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்

இந்தாண்டு துவக்கத்தில்  சனி, குரு பகவான்,   சற்று சாதகமற்ற நிலையில் இருந்தாலும், ராசி நாதன்  11ல்  இருப்பது    மற்றும்   11ல் கேது இருப்பதால்   சிறிய தாமதத்திற்கு பிறகு  முயற்சிகளில்  வெற்றி  கிட்டும்.

 

தொழிலில்  இருந்த மந்த நிலை மாறும்,  தொழில்  ரீதியான கடன்கள்  கிடைக்கும்,  கூட்டு தொழில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சாதகமான சூழ்நிலை உருவாகும்,  தொழில்,  வியாபாரம்,  வேலையில்  இருந்த  மறைமுக போட்டிகள்,   போட்டியாளர்களின்  இடையூறுகள்   குறையும்.

 

புதிய வாடிக்கையாளர்கள் மூலம்  லாபம் கிடைக்கும்,  உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு  மேலாதிகாரிகள்,   உடன் பணிபுரிபவர்களுடன்  ஏற்படட  பிரசனைகள்  நீங்கி சாதகமான சூழ்நிலை உருவாகும்.

 

வேலை  தேடுவோருக்கு   வேலை வாய்ப்பு  மற்றும்   வெளிநாட்டு  வேலை  முயற்சியில் இருப்பவர்களுக்கு  வெற்றி கிடைக்கும்,  சிலருக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம்  ஏற்படும்.

 

இந்தாண்டு   பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகள் தீர்ந்து,   வரவேண்டிய  பணம் கைக்கு வந்து  சேரும்.   வருடத்தின்  பிற்பகுதியில் நல்ல  பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில்  மருத்துவ  செலவுகள் குறையும்.

 

உடல், மன ரீதியான சோர்வு, கவலை நீங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும்.  நீண்ட  நாள் முயற்சிகள்  கைக்கூடும்,  வீண் அலைச்சல்,  செலவுகள்  குறையும். திடீர்  தனவரவு,  அந்நிய  நபர்களால்   எதிர்பாராத  நன்மை,  வெளிநாட்டு  தொடர்பு  வர்த்தகம், வியாபாரம்  மூலம்  லாபம் கிடைக்கும்.

 

வங்கி  கடன் மூலம்  புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைக்கூடும்.  புதிய நண்பர்களால் நன்மை, முன்னேற்றம்  ஏற்படும்.

 

ஆண்டின்  முற்பகுதியில்  இயற்கை மற்றும்  லக்கின  சுபரான  குரு  பகவான் ராசிக்கு 6ல் மறைவு  பெற்றாலும்,   10, 12, 2ம் இடங்களை  பார்வை   செய்வதால்.

 

தொழில், வேலையில் சிறிய இடமாற்றத்திற்கு  பிறகு முன்னேற்றம் ஏற்ப்படும். சிலருக்கு புதிய  வேலை வாய்ப்புகள்  தேடி வரும்.  நீண்ட நாட்கள்  நினைத்திருந்த  வெளிநாடு சுற்றுலா  மற்றும் புனித  ஆன்மிக  ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.

 

குடும்பத்தில் சுபகாரிய  செலவுகள்  ஏற்படும்.

நிலம் மற்றும் பங்கு சந்தை போன்றவற்றில் புதிய முதலீடுகளால் லாபம்  உண்டு,  தேவைக்கேற்ற பண வரவு சிறப்பாக  இருக்கும் எனினும்  ஆகஸ்ட் மாதம் வரை   கவனம்  தேவை,

 

மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  மந்த நிலை மாறி  படிப்பில்  ஈடுபாடு, கவனம் அதிகரிக்கும், முயற்சியால்   நினைத்த  மதிப்பெண்களை  பெற கூடிய வாய்ப்புண்டு.

 

வீண்  கவலைகள் வேண்டாம்,  நம்பிக்கையோடு இருங்கள்

புதிய  முயற்சி, செயல்களில்   நம்பிக்கை  அதிகம்  தரக்கூடிய ஆண்டாக  இருக்கும்

 

உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து   நன்மையான  பலன்கள்  அதிகம் நடைபெறும்.

 

பரிகாரம்

குல தெய்வ வழிபாடு,  செவ்வாய்க்கிழமைகளில்  முருகன் வழிபாடு செய்வதும்,  இயன்றவர்கள்  திருச்செந்தூர்   சென்று முருகனை வழிபடுவதும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு  உணவளிப்பதும்  சிறந்த பலன்களை தரும்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More