2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் மிதுன ராசி | 2017 New Year Rasi Palangal Mithuna Rasi

0 194

 

மிதுனம்  ( மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை)

 

மிதுன  ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்

 

ராசி நாதன்  7ல்  இருந்து  ராசியை பார்க்க  தொடங்கும் இந்தாண்டு தொழில், உத்தியோகம், வியாபாரத்தில்  நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  பொருளாதார  ரீதியான  வளர்ச்சி உண்டு,

 

உங்கள்  எண்ணம்,செயல்களில்  வேகம் கூடும்,  உடல்  நலம்   சிறப்பாக  இருக்கும்.    தொழில் தொடர்பாக   முன்பு   வாங்கியிருந்த கடன்கள்  அடைபடும்.  புதியதாக   வங்கி  கடன்  கிடைக்கும்.

 

சிலருக்கு  வங்கி   கடன் மூலம்   நிலம், வீடு,   வீட்டு  உபயோக பொருட்கள் அதிகம் வாங்கும்  வாய்ப்பு  கிட்டும். வெளிநாடு,  வெளியூர்    வேலை   வாய்ப்பு  முயற்சியில் உள்ளவர்களுக்கு  வெற்றி  கிட்டும்.

 

தொழில், வியாபாரத்தில் இருக்கும்   மறைமுக   போட்டியாளர்கள்  பின்வாங்குவர்.  வேலையில்  இருக்கும்  பலருக்கு ஊதிய உயர்வுடன்   கூடிய  இடமாற்றம்   கிடைக்கும்.

 

குடும்பத்தில்  சுப செலவுகள் அதிகரிக்கும், சிலருக்கு  மனைவி வழி  சொத்துக்கள்,  உறவினர்களால் ஆதாயம்   கிடைக்கும்.

 

இந்தாண்டு  சனிப்பெயர்ச்சிக்கு  பிறகு   புதிய செயல்கள், கூட்டு தொழில் போன்றவற்றில்  கவனமாக  இருப்பது  நன்று.  புதிய முதலீடுகள்,  தொழில்  விரிவாக்கம்,   புதிய  நபர்களை   வேலைக்கு  சேர்ப்பது போன்றவற்றை  நன்கு  ஆலோசித்து   செய்யுங்கள்.

 

உடல்,  மனோ  ரீதியான சோர்வு  வந்து  விலகும்,  மறதி அதிகம்    ஏற்பட  வாய்ப்புண்டு,  எங்கும், எதிலும் தேவையானவற்றை  முன்பே  தயார்  செய்து  கொள்ளுங்கள். ஒரே  நேரத்தில்  இரண்டு  வேலைகள்,  செயல்களில்  ஈடுபடுவதை தவிருங்கள்.

 

தொழில், வேலை தொடர்பான  நீண்ட  தூர பயணங்கள்  அதிகம் ஏற்ப்படும்.   புதியதாக  கூட்டு  தொழில், வர்த்தகத்தில்  ஈடுபடுவது  சிறப்பல்ல,  நம்பியவர்கள்  ஏமாற்ற வாய்ப்புண்டு,    வேலையில்    உடன்  பணிபுரிவோர்,  மேலதிகாரிகள் உடன்  கருத்து  வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். இடமாற்ற  சிந்தனை  அதிகரிக்கும், அவசரம்  வேண்டாம்.

 

கணவன், மனைவி  உறவில் சிறிய  கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்,   விட்டு கொடுத்து செல்வது  நலம்,  உறவினர்கள், நண்பர்களிடமும், கூட்டு தொழிலில்  பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.  உங்கள்  புதிய முயற்சிகள், செயல்கள்  தாமதத்திற்கு  பிறகு  வெற்றி பெறும். பொறுமை  அவசியம்.

 

மாணவர்களுக்கு  கல்வியில்  மந்த நிலை, மறதி  ஏற்பட வாய்ப்புண்டு,

முக்கிய பாடங்களில்  கவனம்  செலுத்தினால்  அச்சம்  கொள்ள தேவையில்லை.

 

இந்தாண்டு  நிகழும் குரு  பெயர்ச்சி  உங்களுக்கு  சாதகமாக இருக்கும்,  காரிய  தடை, தாமதம் விலகும்,  திருமணம்   போன்ற சுப முயற்சிகள்  கைக்கூடும்.

 

கவலையை  விடுங்கள், எதிலும்  மற்றவர்களை  எதிர்பார்க்காமல்,  உங்கள்  சுய முயற்சியில்   சற்று  கவனத்துடன்  செயல்படுங்கள்,

சற்று  தாமதமானாலும்,  வெற்றி  உங்கள்  வசமாகும்.

 

உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து   நன்மையான  பலன்கள்  அதிகம் நடைபெறும்.

 

பரிகாரம்  

சனி,புதன் கிழமைகளில்   பெருமாள்,  ஆஞ்சநேயர்   வழிபாடு செய்வதும்,  ஆதரவற்ற  குழந்தைகளுக்கு  உணவு, உடை போன்ற  இயன்ற உதவிகளை செயவது   சிறந்த பலன்களை தரும்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More