2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி | 2017 New Year Rasi Palangal Vrischaka Rasi

0 185

 

விருச்சிகம்  ( விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை  )

 

விருச்சிக   ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்

 

ராசி நாதன்  செவ்வாய்   சதுர்  கேந்திரம்  எனும்  4 ல்   இருக்க,   இயற்க்கை     மற்றும்  ராசி  சுபரான   குரு   லாப ஸ்தானம்  எனும் 11ல்  இருக்க  தொடங்கும் இந்தாண்டு உங்களுக்கு பல பிரசனைகளிலிருந்து  விடுபட்டு வளர்ச்சியை  நோக்கி  அடியெடுத்து செல்லும்  ஆண்டாக இருக்கும்.

 

தேவைக்கேற்ற  தனவரவு  நன்றாக  இருக்கும்,  குடும்பத்தில் மருத்துவ  செலவுகள் குறையும்,  கடன்கள்  பெரிதும்  குறையும்.

 

இந்த ஆண்டு  சனிப்பெயர்ச்சி   ஜென்ம  சனி  விலகும்  காலமாகும்.

முக்கிய  சுப காரியங்களில், முயற்சிகளில்   இருந்த  தடை ,  தாமதம்  விலகும்.  தொழில்,  வியாபாரத்தில்  இருந்த மந்த போக்கு  நீங்கும்.   பலருக்கு தொழில், வியாபாரம்,  வேலையில் இடமாற்றத்திற்கு  பிறகு  முன்னேற்றம்  ஏற்படும்.

 

பூர்விக  சொத்துக்களில் பிரசனைகள்  இருப்பவர்களுக்கு  சாதகமான முடிவு கிடைக்கும்.   குலதெய்வ   வழிபாட்டில்  ஆர்வம்  கொள்வீர்கள். குழந்தை  செல்வம் தாமதித்தவர்களுக்கு குழந்தை  பாக்கியம்  கிட்டும்.

 

பலருக்கு  கட்டிய வீடு  வாங்கும் யோகமும்,  பல  காரணங்களுக்கா  சொந்த வீடு  கட்டியும்  அங்கு  குடியிருக்க முடியாமல்  இருப்பவர்களுக்கு சொந்த  வீட்டிற்கு  மாறும்  காலமாகும்.

 

கடந்த காலங்களில் பிறருக்காக உதவ  ஜாமீன்  போட்டு, பணம்,  வேலை   வாய்ப்பு  போன்ற   உதவிகளை   செய்து  அவர்களால்   ஏமாற்றத்தை   சந்தித்திருப்பீர்கள்,   intha   ஆண்டுகளுக்கு   இது  போன்ற  விஷயங்களில்   கவனமாக  இருங்கள்.  தொழில், வேலை  காரணங்களுக்காக  குடும்பத்தினரை  விட்டு  வெளியூர், வெளிநாட்டில்  இருப்பவர்கள் சிலருக்கு  குடும்பத்தினோடு  சேர்ந்திருக்கும்  காலமாகும்.

 

10மிட ராகு தொழில்,  வேலை  பளுவை அதிகரித்தாலும்  முன்னேற்றமான   பலன்களை  தரும்,  வேலையில்லை என்ற நிலை இருக்காது. வேலையில் அடிக்கடி இடமாற்றம்  செய்யும் சிந்தனையை தவிர்த்தல்  நலம்.   உடன் பணிபுரிபவர்கள், மேலதிகாரிகளுடன்  சிறிய கருத்து  வேறுபாடுகள்  ஏற்பட்டு விலகும்.

 

வெளிநாடு  தொடர்பு  வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி  வியாபாரம் செய்ப்வரக்ளுக்கு  நல்ல லாபம் கிடைக்கும்.

 

4மிட கேது  உடல் ரீதியான  இனம்புரியா  பாதிப்புகளை சிறது தரக்கூடும், உடல் நலனில்  அக்கறை கொள்வது அவசியம். உணவு முறைகளில்  நேரம் தவறாமை,  கட்டுப்பாடு போன்றவற்றை கடைப்பிடிப்பது  நலம்.

 

மாணவர்களுக்கு கல்வியில்  இருந்த  மந்த நிலை, மறதி  மாறும்,  கல்வியில்  தடை  ஏற்படடவர்கள்  மீண்டும்  தொடர  வாய்ப்புண்டு.

 

புதிய செயல்களில், முயற்சிகளில்   ஈடுபடும் முன்  நன்கு  ஆலோசித்து  செயல்பட்டால்  வெற்றி  உறுதி.

 

உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து   நன்மையான  பலன்கள்  அதிகம் நடைபெறும்.

 

 

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை  முருக பெருமான்  வழிபாடு,   ஆதரவற்ற முதியோர்களுக்கு இயன்ற உதவிகளை  செய்வது   சிறந்த பலன்களை தரும்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More