மகர ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020

0 612

மகர ராசி அன்பர்களே
(உத்திராடம் 2,3,4, திருவோணம் அவிட்டம் 1,2) குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020.

வாக்கியப்படி

குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி (28.10.2019) திங்கட்கிழமை 54.14 நாழிகை (இரவு 03:52) அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

திருக்கணிதப்படி

குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (04.11.2019) திங்கட்கிழமை (57.56 நாழிகை) விடியற்காலை 05:17 அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

மகர ராசி (40%): (விரைய குரு)

கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் எனப்படும்
11 ஆம் இடத்தில் இடத்தில் லாப குருவாக இருந்து பலவகையான சுபத்தை தந்து இருப்பார்.

இனி அடுத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாகி விரைய குருவாக வருகிறார்.

” வன்மையுற்றிட ராவணன் முடி பனிரெண்டில் வீழ்ந்ததும்”

என்ற பாடலின் படி பதவி இழப்பு தொழில் துறையில் நஷ்டம் எதிர்பாராத விபத்துக்கள் தண்டச் செலவுகள் சுபச்செலவுகள் (வீடு மனை கட்டுதல் திருமணம் பொன் பொருள் வாங்குதல்)
நடக்கும் காலம்.

குருபகவான் பெயர்ச்சியாகி

🌸ஐந்தாம் பார்வையாக உங்கள் சுகம் வீடு மனை குடும்ப ஸ்தானம் எனப்படும் 4-ஆம் இடத்தையும்.

🌸ஏழாம் பார்வையாக உங்கள் ருண ரோக சத்ரு வெற்றி ஸ்தானம் ஸ்தானம் எனப்படும் 6-ஆம் இடத்தையும்.

🌸9-ஆம் பார்வையாக உங்கள் ஆயுள் உழைக்காத வருமானம் ஸ்தானம் எனப்படும் 8-ஆம் இடத்தையும் பார்க்க இருக்கிறார்.

நிதிநிலை :

நிதி நிலைமை உங்களுக்கு தேவையான அளவில் வந்துகொண்டே இருக்கும் வங்கி இருப்புகள் கரையும் காலம் முதலீடுகள் செய்வதில் மிகுந்த கவனம் தேவை தனியார் நிதி நிறுவனங்களில் பங்கு சந்தைகளில் புதியவர்களிடம் தெரியாதவர்களிடம் முதலீடு செய்வது தவிர்க்க வேண்டிய காலகட்டம் குடும்பத்திற்கு அதிக செலவுகள் ஏற்படும் காலகட்டம் இதில் சுபச்செலவு அடங்கும் கடன்கள் அடைபடும் காலம் தேவையில்லாத முதலீடுகளை தவிர்க்க வேண்டிய காலகட்டங்கள்.

உத்தியோகம்/ தொழில்/ வியாபாரம்:

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வருடம் சுமாரான காலகட்டம் புதிய வேலை வாய்ப்புகளை தேடி அலைய வேண்டாம் இருக்கும் வேலையில் இருப்பதே சிறப்பான காலகட்டம் புதிய முயற்சிகளை அல்லது இடமாற்றத்தை தவிர்க்க சிறப்பு புதிய இடம் மாற்றுதல் அல்லது வேலை வாய்ப்புகள் கிடைத்தால் ஒன்றுக்கு இரண்டுமுறை ஆலோசித்து செய்வது சிறப்பு பதவி உயர்வுகள் சம்பள உயர்வுகள் கணிசமாகவே இருக்கும் எதிர்பார்த்தவாறு இருக்காது பணி செய்யும் இடத்தில் இருந்து வந்த பலவித பிரச்சனைகள் சரியாகும் காலகட்டம்.

வியாபாரம் தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் விஸ்தரிப்பு செய்வதை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய காலகட்டம் கடன்வாங்கி வியாபாரத்தை அல்லது தொழிலை பெருக்க உகந்த காலம் அல்ல இருக்கும் வியாபாரத்தை தொடர்ந்து நடத்துவதை சிறப்பு புதுவகையான தொழிலில் அல்லது வியாபாரத்தில் இறங்க வேண்டாம் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டிய காலகட்டமாகும் தொழில் வியாபாரத்தில் இருந்த கடன்கள் அடையும் காலம் வியாபாரத்தில் போட்டிகள் குறையும் எதிரிகள் தொல்லை குறையும் தொழில் செய்பவர்கள் புதிய இயந்திரங்களை வாங்கி நிறுவும் காலம்.

திருமணம் , குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் :

குரு 5-ஆம் பார்வையாக உங்கள் 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்துவந்த பலவித பிரச்சனைகள் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று கூடும் காலம் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணங்கள் நடந்தேறும் குழந்தை பாக்கியம் ஏற்படும்.

வீடு வண்டி வாகனம் :

குரு பகவான் ஐந்தாம் பார்வையாக நான்காம் இடத்தை பார்ப்பதால் மனை வீடு கட்ட உகந்த காலம் புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் காலம் மற்றும் பழைய வண்டிகளை விற்று புதிய வண்டி வாகனங்கள் வசதிகள் ஏற்படும் தாயாருக்கு இருந்து வந்த உடல்நல பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும் புதிய நிலையான சொத்துக்களை வாங்கும் காலகட்டங்கள் குடும்பத்துக்குத் தேவையான சுப விரயங்கள் அதிகம் ஏற்படும்.

மாணவ மாணவியர்கள்:

பட்டப்படிப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு மிகுந்த உகந்த காலம் நல்ல மதிப்பெண்கள் பெற்று வேலை கிடைக்கும் அல்லது விரும்பிய உயர்கல்வி அமையும் காலகட்டம்
ஆரம்பக் கல்வி படித்தவர்கள் கவனத்துடன் படிப்பைத் தொடர வேண்டிய காலகட்டம் ஆராய்ச்சிக் கல்வி படிப்பவர்களுக்கு கொஞ்சம் இக்கட்டான காலகட்டம் எனவே கவனத்துடன் செயல்பட்டால் தான் அந்த வருடத்துக் உண்டான பலனை அடைய முடியும்.

விவசாயிகளுக்கு:

விவசாயிகளுக்கு வருமானங்கள் கூடும் கடன்கள் அடையும் காலகட்டம் புதிய விவசாய கடன்களும் கிடைக்கும் பணப் பெயரில் நல்ல லாபங்கள் உண்டாகும் புதிய நஞ்சை புஞ்சை நிலங்களை கவனத்துடன் வாங்க வேண்டும்.

பெண்களுக்கு :

வயதுக்கு வராமல் தவித்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் காலம் கர்ப்பப்பை பிரச்சனைகளில் தவித்துக்கொண்டிருந்த பெண்களுக்கு மருத்துவத்தின் மூலம் நிவாரணம் கிடைக்கும் அடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் பணி செய்யும் பெண்கள் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம் உடல் நலம் முழுமையாக சரியாகும் காலகட்டம்.

மற்ற பலன்கள்:

புதிய மனை வீடு வண்டி வாகனம் இயந்திரங்கள் ஆகியவை வாங்கும் காலகட்டம்.

தாயாரின் உடல்நலம் முழுவதும் சரியாகும்.

கடன் பிரச்சனைகள் தீரும் எதிரிகளின் தொந்தரவு குறையும் வம்பு வழக்குகள் தீரும் காலம்.

உடலில் இருந்து வந்த உடல்நலப் பிரச்சனைகள் முழுவதும் சரியாகும்.

எதிர்பாராத வகையில் பங்கு சந்தை யூக வணிகத்தில் திடீர் லாபங்கள் கிடைக்கும்.

உழைக்காத பணம் கிடைக்கும் காலகட்டம்.

மரண பயங்கள் நீங்கும் காலகட்டம்.

இடுப்பு வலி இடுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும் காலம்.

மர்ம உறுப்பில் இருந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் நிவாரணம் கிட்டும்.

பரிகாரம்:

🍥 தினந்தோறும் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்ய சிறப்பு.

🍥 அடிக்கடி திருச்செந்தூர் சென்று திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்ய சிறப்பு.

🍥 குரு ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு தேவைப்பட்ட பொருளை வாங்கித் தர வேண்டும்.

🍥 தினந்தோறும் சந்தன பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

முக்கிய குறிப்பு:

மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுவானவையே மற்ற கிரக பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகள் மற்றும் கிரக சேர்க்கைகள் பொருத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆகையால் புதிய முயற்சிகள் அல்லது முடிவுகள் எடுக்கும் பொழுது அருகில் உள்ள ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு தெளிவான முடிவுகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More