கும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020

0 2,925

விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் கும்ப ராசி

இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் 10 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 5 ஆம் இடத்தில் ராகுவும் 11 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள்

கடந்த 6 மாதமாக குரு பகவான் உங்களுடைய பத்தாம் வீட்டில் இருந்து கொண்டு தொழில் வியாபாரம் உத்தியோகஸ்தர்களுக்கு பல விதமாக சங்கடங்களையும் பிரச்சனைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தொழில் வியாபாரம் ஆகியவற்றில் வரும் குரு பெயர்ச்சி வரை மந்தநிலையை இருக்கும் வரும் குரு பெயர்ச்சி வரை தொழிலை அபிவிருத்தி செய்ய விஸ்தரிக்கவும் புதிய தொழிலை ஆரம்பிக்கும் கூடாது. உத்தியோகஸ்தர்களுக்கு பலருக்கு விருப்பமற்ற இடமாற்றம் பணிச்சுமை அதிகரிப்பு வேலை இழப்பு ஆகியவை ஏற்படும் எனவே மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய நேரம். ஏற்கனவே பணிபுரியும் இடத்தில் இடமாற்றம் செய்தால் உடனே ஏற்றுக் கொண்டு செல்வது சிறப்பு. மேலதிகாரிகளின் தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும் வேலைகளில் இடர்பாடுகள் சக ஊழியர்களின் தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும் குறிப்பாக சக பெண் ஊழியர்களிடம் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். மேலும் லாப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரித்து கொண்டிருப்பதும் தொழில் வியாபாரத்தில்
லாபங்கள் அடைவதில் மிகுந்த பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்காது எனவே பொறுமையுடன் இருக்க வேண்டிய காலகட்டம். குருபெயர்ச்சி க்குள் திருமணம் கூடி வரும் அல்லது வரன் முடிவாகும். தனவரவுகள் தேவைக்கு உண்டான அளவு வந்து கொண்டே இருக்கும் புதிய வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம் தரும் தாயாரின் உடல் நலன்கள் சரியாகும் குறிப்பிட்ட அளவு கடன் அடையும் எதிரிகள் தொந்தரவு கட்டுக்குள் இருக்கும் உடல் நலம் நன்றாக இருக்கும்

மாணவ மாணவிகளுக்கு விரும்பிய மேற்படிப்பு உயர் படிப்புகள் அமையும்

நவம்பர் 5-ஆம் தேதி குரு பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவான் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் வருவதால் லாபங்கள் அதிகரிக்கும் நீண்ட காலம் நிறைவேறாத ஆசைகள் அபிலாஷைகள் நிறைவேறும் காலம் கடந்த ஒரு வருடமாக அனுபவித்து வந்த தொந்தரவுகள் முழுவதுமாக வரையும் தொழிலில் லாபங்கள் கூடும் உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி இடமாற்றம் சம்பள உயர்வு பதவி உயர்வுகள் வந்து சேரும் புதிய வேலைவாய்ப்புகள் அமையும் திருமண காலத்தில் உள்ள வது வரன்களுக்கு திருமணம் நடந்தேறும் குழந்தை பாக்கியத்திற்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்சினைகள் சுமூக தீர்வுக்கு வரும். பிரிந்திருந்த கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் மறந்து ஒன்று சேரும் காலம். கணவனும் ஓர் இடத்திலும் மனைவி ஓர் இடத்திலும் பணிபுரிந்த நிலைமை மாறி ஒரே இடத்தில் பணிபுரியும் சூழல் உருவாகும்.

மாணவ மாணவிகள் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெரும் காலம் விரும்பிய கல்லூரி மற்றும் கல்வி கிடைக்கும்

ஜனவரி 24 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது அதில் முதல்கட்டமாக இரண்டரை வருடம் விரைய சனியாக செயல்படுவார். இதனால் கட்டுக்கடங்காத தண்டச் செலவுகள் தேவையற்ற செலவுகள் மருத்துவச் செலவுகள் ஏற்படும் காலம் இது. எனவே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு சுபச்செலவுகள் ஆக மாற்றிக்கொள்ள சிறப்பு உதாரணத்திற்கு வீடு கட்ட புதிய வண்டி வாகனங்கள் வாங்க திருமணத்தை முடித்து கொள்ள மற்ற சுபச் செலவுகளை செய்து கொள்ளலாம். சனி பெயர்ச்சியாகி உங்கள் 2,6,9 ஆகிய இடங்களில் பார்வையிடுவதால் குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் உண்டாகும். தேவையற்ற வாக்குறுதி உத்திரவாதம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அனாவசிய சர்ச்சையில் சிக்கி தேவையற்ற வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும். பணத் தட்டுப்பாடுகள் நிலவும். தந்தையின் உடல்நிலையில் பிரச்சனைகள் ஏற்படும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தந்தை மூலம் பாதிப்புகளும் ஏற்படும். எதிரிகளின் தொந்தரவுகள் குறையும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெற்றி வாய்ப்புகள் தள்ளிப் போகும். தூர பயணங்கள் மற்றும் புதிய பொன் பொருள் ஆடை சேகரிப்புகள் குறையும். நீண்டகால தேவையற்ற முதலீடுகளை செய்வதை தவிர்க்க வேண்டிய காலம்.

மாணவ மாணவிகள் அடிக்கடி ஞாபக மறதியால் அவதிப்படுவார்கள். உறக்கம் கெடும்

பரிகாரம்

சனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு

ஒருமுறை திருச்செந்தூர் சென்று வழிபட்டு வர சிறப்பு அங்கு மூன்று சந்நியாசிகளுக்கு காவி வேட்டி துண்டு வாங்கி தர சிறப்பு

ஏழை எளியவர்களுக்கு ஊனமுற்றவர் விதவைகளுக்கு வஸ்திர தானம் செய்ய சிறப்பு

மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்

எனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு

❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்

விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2019

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More