மிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020
விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் மிதுன ராசி
இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் ராசியில் ராகுவும் 7ல் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள்
தொழில் வியாபாரம் நிமித்தமாக கடன் வாங்குவதை வரும் ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி வரை தவிர்க்க வேண்டும்.கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் பொறுப்புடன்செயல்பட வேண்டும். கூட்டுத் தொழிலில் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் உண்டாகும். புதிய தொழில் /விரிவாக்கம்/மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாற்றத்தை தவிர்த்துக்கொள்ளவேண்டும் தொடர்ந்து பணியில் பலவிதமான சங்கடங்கள் தொல்லைகள் உண்டாகும்
கணவன் அல்லது மனைவிக்கு உடல்நிலை ஆரோக்கிய செலவுகள் தொந்தரவுகள் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகம் உண்டாகும் சண்டை சச்சரவு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்
புதிய வீடு வண்டி வாகனங்கள் வாங்குவதில் காலம் தாமதம் செய்யலாம். வீட்டில் பராமரிப்பு பணிகள் உண்டாகும். வீடு மாற்றம் தொந்தரவை தரும். அடிக்கடி வாகனச் செலவுகள் ஏற்படும் தாயாரின் உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும்.
குடும்பத்தில் நட்பு வட்டத்தில் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் மன ஸ்தாபங்கள் உண்டாகும். தேவையில்லாத வாக்கு வாதங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது
மாணவ மாணவியருக்கு மேற் மேற்படிப்புகளில் சங்கடங்கள் குறைவான மதிப்பெண்கள் விரும்பிய படிப்புகள் அமைவதில் கடினமான சூழ்நிலை உண்டாகும் விரும்பிய கோர்ஸ் கிடைக்காமல் தவிப்பீர்கள் உயர் படிப்பு தடைபடும் காலம்
நவம்பர் 5-ஆம் தேதி குரு பெயர்ச்சிக்கு பிறகு மேற்கண்ட பிரச்சினைகள் எல்லாம் சுமூகமாக முடிவுக்கு வரும்
தொழில் வியாபாரம் விருத்தி அடையும் உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இட மாற்றம் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும் ஒற்றுமை ஓங்கும் வெகு நாட்களாக திருமணத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவர்களுக்கு திருமணம் நடந்தேறும் உடல் நிலையில் ஆரோக்கியம் உண்டாகும். கூட்டுத்தொழில் சிறப்பைத்தரும்
ஜனவரி 24 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டமச் சனியாக வருவதால் தொழில் மாற்றங்கள் உத்தியோக மாற்றங்கள் வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அலுவலகத்தில் தரும் இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டு மாற்றமாகி செல்வது சிறப்பு
கணவன்-மனைவிக்குள் பிரிவினைகள் ஏற்படும் ஆகையால் இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டு வெளிநாடு வெளியிடத்தில் பணிபுரிவது சிறப்பு
உடல்நிலையில் கவனத்துடன் செயல்பட வேண்டும் உடனுக்குடன் தேவையான மருத்துவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்
ராசியிலும் ஏழாம் இடத்திலும் கேது இருப்பதால் தொடர்ந்து தொந்தரவுகள் ஏற்படும் உடல்நல பாதிப்புகளும் உண்டாகும் கணவன் அல்லது மனைவிக்கும் உடல் நல பாதிப்புகள் ஏற்படும். அடிக்கடி விஷ சம்பந்தமான நோய்கள் உண்டாகும் வெளியிடத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது சிறப்பு
பரிகாரம்
குலதெய்வ இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம்
வியாழக்கிழமையன்று திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்வது சிறப்பை தரும் மற்றும் குருமார்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தருவது சிறப்பை தரும்
சனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு
மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்
எனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு
❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்