சிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020

0 4,318

விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் சிம்ம ராசி

இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 11 ஆம் இடத்தில் ராகுவும் 5 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள்

வரும் குரு பெயர்ச்சி வரை உங்கள் 8-ஆம் இடம் 10-ஆம் இடம் 12-ஆம் இடம் பார்வையிடுவதால் தொழில் வியாபாரம் உத்தியோகம் வழியில் எதிர்பாராத நல்ல வளர்ச்சி உண்டாகும் இருந்தாலும் லாபகங்கள் இருக்காது மொழிமாற்றம் விஸ்தரிப்பு விரும்பாத இடமாற்றம் ஏற்படும் பதவி உயர்வு கிடைக்கும் ஆனால் அதற்கு தகுந்த லாபங்கள் / சம்பள உயர்வு அமையாது. உற்பத்தி செய்த பொருட்கள் விரைவாக விற்று தீரும் சரக்கு தேக்கங்கள் குறையும் வெகு நாட்களாக வெளிநாடு பயணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும் எதிர்பாராத வருமானங்கள் யோகங்கள் லாட்டரி ரேஸ் சூதாட்டங்கள் இவைகள் மூலம் லாபங்கள் கிட்டும் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ராகு சாதகமாக இருப்பதால் வெளிநாடு பயணங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் வெளிநாடு வேலை வாய்ப்புக்கள் வெளிநாடு ஆர்டர்கள் கிடைக்கும்.

காலகட்டங்களில் மனக்குழப்பங்கள் மன வேதனை சஞ்சலங்கள் அடிக்கடி வந்து போகும்

மாணவ மாணவிகள் படிப்புகளில் இக்கட்டான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் விரும்பிய கல்வி அமைவதில் தடங்கல்கள் உண்டாகும். சரியாக தெரிவு செய்து மேல்/ உயர் படிப்புகளில் சேர வேண்டும்

வெளிநாடு கல்வி அமைய வாய்ப்புகள் உண்டாகும்

குருபெயர்ச்சி வரை திருமணங்கள் தடை தாமதங்கள் தள்ளிப்போக வாய்ப்புகள் உண்டு

குழந்தை பாக்கியம் சிறிது பிரச்சனை அல்லது கஷ்டத்துடன் அமையும் பெரும்பாலும் அறுவை சிகிச்சை இந்த ஆக வாய்ப்பு உண்டு.மருத்துவ முறையில் குழந்தை பேறு அமைய தாமதம் உண்டா

தற்போது உங்களுக்கு சனிபகவானும் சாதகமான நிலையில் இல்லை அதனால் பணத் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை முற்றிலுமாக சீர்குலைந்து இருக்கும்.

நவம்பர் 5-ஆம் தேதி குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் பாக்கியஸ்தானத்தையும் ராசியையும் லாபஸ்தானத்தையும் பார்வையிடுவதால் தொழிலில் இருந்த அனைத்து கஷ்ட நஷ்டங்களும் முடகங்களும் நிவர்த்தியாகும் உடலில் இருந்த பிரச்சனைகள் சரியாகும் லாப வரவுகள் அதிகரிக்கும் கடந்த ஆறு மாதத்தில் கொடுத்த கடன்கள் அனைத்தும் வசூலாகும் சுப தகவல்கள் வரும் ஆன்மீக சுற்றுலா பயணம் உண்டாகும் புதிய புன்னகை ஆடை ஆபரணங்கள் ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறும் காலம்

திருமணத் தடைகள் நீங்கும் வரன்கள் அமையும் காலம் இந்த காலகட்டத்தில் திருமணமும் முடிவுக்கு வரும் குழந்தை பாக்கியங்கள் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் புதிய வீடு வண்டி வாகனம் வாங்க நினைப்பவர்கள் இந்த காலத்தில் வாங்கிக்கொள்ளலாம்

மாணவ மாணவிகள் படிப்புகள் நன்றாக அமையும் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் காலம். நீங்கள் விரும்பிய துறையில் உயர்கல்வி / மேற்படிப்பு அமையும்

ஜனவரி 24 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு இதுவரை உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி தேக ஆரோக்கியம் பெறும் மரண பயங்கள் நீங்கும் காலம் வெகுநாட்கள் மருத்துவச் சிகிச்சையில் இருந்தவர்கள் வீடு திரும்புவார்கள் இளைய சகோதர சகோதரிகள் வழியில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும் முயற்சி எடுப்பதில் கால தாமதங்கள் உண்டாகும் எழுத்து ஒப்பந்தங்களில் கவனமாக செயல்பட வேண்டிய காலம். பணத்தை தேவையற்ற விஷயங்களில் முடக்கம் செய்வதை தவிர்க்கலாம். ரேஸ் லாட்டரி எதிர்பாராத வருமானம் தரும் தொழில்களில் பணத்தை முதலீடு செய்வது தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்டங்கள் குறையும். தாய்க்கு உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும்

பரிகாரம்

குலதெய்வ இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம்

சனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு

அஷ்டமியில் கால பைரவர் வழிபாடு அவசியம்

சாய்பாபா வழிபாடு சிறப்பைத்தரும்

மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்

எனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு

❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்

விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2019

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More