மகர ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019

0 956

Get real time updates directly on you device, subscribe now.

விளம்பி வருட பலன் மகர ராசி

மகர ராசி (70%)
============

இந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் சாதகமாக இல்லை. வருடம் முழுவதும் சனி பகவான் விரைய சனியாக சாதகமான நிலையில் இல்லை எனவே புரட்டாசி வரை கவனமுடன் செயல்பட வேண்டும்

💑 திருமணம் நடக்கும் ஆனால் காலதாமதம் ஆகும். குடும்பத்தில் விரைய செலவுகள் அதிகமாக நடக்கும். கணவன் மனைவிக்கு மருத்துவ செலவுகள் கூடும். காதல் வெற்றி தள்ளி போகும். குழந்தை தாமதம் ஆகும்

🏠 வீடு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். புதிய வீடு வாங்கும் திட்டத்தை புரட்டாசி தள்ளி வைப்பது நல்லது.

🛵🚗 வண்டி வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத தொந்தரவுகள் வண்டி மூலம் ஏற்படும்.

📖படிப்பில் மிகுந்த கவனம் தேவைப்படும் காலம். நல்ல மதிப்பெண்கள் பெரும் காலம்.கடைசி நேரத்தில் விரும்பிய படிப்பு கிடைக்காமல் போகும்.

⚖தொழில் இடமாற்றம் ஏற்படும். இடைப்பட்ட வயதில் இருப்பவர்கள் பொங்கு சனி மூலம் ஆதாயம் அடைவார்கள். ஏந்த முயற்சி எடுத்தாலும் தடங்கள் எற்பட்டு வெற்றி பெரும். தொழிலில்/வேலை/வியாபார துறையில் அலைச்சல் எற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வேலை இடமாற்றம் கிடைத்தால் விரும்பி ஏற்று கொண்டு சென்றால் நல்ல ஆதாயம்,உயர்வு அடுத்த 6 மாதத்துக்கு பிறகு கிட்டும்

🕉 அய்யப்பன் தர்சனம் உண்டாகும்

🔘புரட்டாசிக்கு பிறகு குரு பகவான் நல்ல ஆதாய ஸ்தானத்துக்கு வருவது தாராள பணப்புழக்கத்தை ஏற்படுத்துவார். சுப செலவுகள்,ஆடம்பர செலவுக்கு எற்ற வகையில் வருமானம் பெருகும். உயர்ந்த பதவியில் நிறைய சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் வரும். இருக்கும் இடத்தில் உயரிய பதவியும்,சம்பளமும் கிட்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பழைய பாக்கிகள் வரவாகும். நினைத்த காரியத்தில் வெற்றி கிட்டும். தொழில்/வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும், புதிய வீடு மனை வண்டி வாகனம் வாங்கும் வசதிகள் உண்டாகும். திருமணம் முடியும் உடன் குழந்தை பாக்கியமும் கிட்டும். கணவன் மனைவிக்குள் இருந்த சன்டை சச்சரவுகள் நீங்கும், படிப்பு சிறக்கும். வேலை தேடுபவர்களுக்கு உடனடியாக கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டாகும். உறவினர்கள் தேடி வரும் காலம். உங்களுக்கு இது ஓரு பொற்காலம் ஆகும்

பரிகாரம்
=======

குரு பகவான், சனி பகவானுக்கு விளக்கிட்டு தர்சனம் செய்ய வேண்டும்

திருச்செந்தூர் முருகன் தர்சனம்

சபரிமலை அய்யப்பன் தர்சனம் மிகுந்த சிறப்பு

மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்

97901 26877
87787 97194

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More