துலா ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019

0 2,122

Get real time updates directly on you device, subscribe now.

விளம்பி வருட பலன் துலா ராசி

துலா ராசி (80%)
============

இந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் சாதகமாக இல்லை,
வருடம் முழுவதும் சனி பகவான் சாதகமான நிலையில் இருப்பதால் எத்தகைய பிரச்சினையும் தைரியமாக சமாளிக்கும் திறன் உண்டாகும் மற்றும் சாதகமான பலன்கள் உண்டாகும் காலம்

💑 திருமண பேச்சு வார்த்தைகள் தள்ளி போகும்/தடை தாமதம் உண்டாகும். நிச்சயித்த திருமணம் நின்று போகும்/அவமானம் வந்து சேரும். குழப்பங்கள் அதிகம் ஏற்படும். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவு உண்டாகி மறையும். குழந்தை பாக்கியம் உண்டாகும் காலம். உறக்கம் கெடும் உடல் நலம் பாதிக்கப்படும்

🏠 புது வீடு கட்டும் திட்டத்தை புரட்டாசி மாதம் வரை தள்ளிபோட சிறப்பு. வீடு மாற்றத்தையும் தள்ளி போடலாம்.

🛵🚗புதிய வண்டி வாகனம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.வண்டி வாகன பயணம் கவனமாக செய்ய வேண்டும். வண்டிகள் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் பழுது நீக்கி கொள்ள உத்தமம்

📖படிப்பில் அதிக கவனம் தேவைப்படும் காலம். பல குழப்பங்கள்/கவன சிதறல்கள் ஏற்படும் காலம். மதிப்பெண்கள் குறையும். மேற்படிப்பில் விரும்பிய படிப்பு கிடைப்பதில் சிரமம் உண்டாகும். தேவையற்ற படிப்பை தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்படும்

⚖புதிய தொழில்/வியாபாரம் தொடங்க முயற்சிகள் எடுத்து புரட்டாசிக்கு பிறகு செயல்படுத்தலாம். கஷ்ட பட்டு உழைத்து சிறிய லாபம் கிட்டும் காலம். வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. பதவி/சம்பள உயர்வு கால தாமதம் ஆகும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிட்டாது

🕉 தெய்வ ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்

🔘புரட்டாசிக்கு பிறகு மேற்கண்ட நிலைகள் மாறும் நல்ல உயர்வு கிட்டும். நல்ல வேலை /தொழில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் பெருகும். கடன்கள் வசூலாகும், பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் வந்து சேறும். படிப்பில் மானவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள், விரும்பிய உயர்கல்வி அமையும், திருமணம் விரைவில் நடக்கும், சந்தான விருத்தி உண்டாகும், பொன் நகை ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய வீடு வண்டி வாகன யோகம் அமையும். நினைத்த அனைத்தும் இந்த ஆறு மாத காலத்தில் நடந்தேறும். பொற்காலம் ஆகும்

பரிகாரம்
=======

ஆலங்குடி குரு பகவான் தர்சனம்

திருச்செந்தூர் முருகன் தர்சனம்

கோவில் வேத பாட சாலைக்கு வேண்டிய பொருளை தானம் செய்ய மிகுந்த சிறப்பு

மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்

97901 26877
87787 97194

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More