விருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020

0 2,571

விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி

இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 8 ஆம் இடத்தில் ராகுவும் 2 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள்

வரும் குரு பெயர்ச்சி வரை உங்களுக்கு ஜென்ம குருவாக வருகிறார் எனவே பலவிதமான இடைஞ்சல்கள் பிரச்சனைகள் எல்லா வகையான தொந்தரவுகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் இருந்தாலும் குழந்தைகளுக்கு சுப நிகழ்வுகள் நடைபெறும் கணவன் மனைவி ஒற்றுமை சுகமாக நடந்து கொண்டிருக்கும்.


கடந்த ஒன்றரை வருடமாக சனிபகவான் சாதகமற்ற நிலையில் இருப்பதும் லாபத்தை குடும்பத்தில் பிரச்சனை வண்டி வாகன பிரச்சனைகள் அடிக்கடி வண்டி வாகனம் பழுதாகும் தாயாருக்கு உடல்நலம் பாதிப்பு மர்ம உறுப்புகளில் பிரச்சனை கண்டங்கள் இவைகளால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் பிரச்சனை வரும் ஜனவரி 2020 வரை தொடரும் வம்பு வழக்கு கோர்ட் சம்பந்தமான பிரச்சனைகளில் தேவையற்ற பிரச்சனைகளை சந்தித்து தண்டனை பெறும் காலம் ஆகவே மிக மிக கவனமாக இருக்கவேண்டும் தற்பொழுது தங்களுடைய தன ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் பண நெருக்கடிகள் அதிகரிக்கும் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரிவுகள் பிரச்சனைகள் ஏற்படும் காலம்

நவம்பர் 5-ஆம் தேதி குரு பெயர்ச்சிக்கு பிறகு உடல்நலனில் இருந்த பாதிப்புகள் தொந்தரவுகள் மருத்துவச் செலவுகள் குறையும் எதிரிகள் தொந்தரவு கட்டுக்குள் வரும் கடன்கள் அடைபடும் மறைமுக எதிரி தொந்தரவுகள் குறையும் திடீர் யோகங்கள் உண்டாகும் தொழில் வியாபாரம் உத்தியோகப் சூடு பிடிக்கத் தொடங்கும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்

ஜனவரி 24 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகும் இக்கட்டான சூழ்நிலையை தொடரும் மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து சேரும் தூர பயணம் தடைபடும் உறக்கமின்மை உற்பத்தி செய்த பொருட்களை தேக்கம் ஏற்படும் ராகு கேதுக்களும் சாதகமான பலன்களை தராது

பரிகாரம்

இஷ்ட தெய்வம் குல தெய்வத்தை தினமும் வழிபட சிறப்பு

சனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு

ஆஞ்சநேயர் கால பைரவர் வழிபாடு செய்ய சிறப்பு

வியாழக்கிழமையில் குரு பகவான் வழிபாடு செய்ய சிறப்பு

ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்துவர சிறப்பு

மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்

எனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு

மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்

விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2019

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More