ஏழரைச்சனி, அஷ்டம ச்சனி யாரை பெரிய அளவில் பாதிக்காது?
சனியின் காரகத்துவம் என்ன?
வறுமை, துன்பம், கலகம்,கடன், நோய், அவமரியாதை ..
சனி வேலைக்காரன்..சனி ஆட்சி, உச்சம் பெற்று சுபகிரகங்களால் பார்க்க படாமல் ,பாவக்கிரகங்களால் பார்க்க பட்டு பாவத்தன்மை பெற்று இருந்தால் மிகக்கடுமையாக உழைத்து பிழைக்க வேண்டும்.வருமானமும் சொல்லி கொள்ளும் படியாக இருக்காது.
சனி ஒருவர் ஜாதகத்தில் வலுக்குறைய வேண்டும்.
முழுமுதல் பாவியான சனி ஆட்சி, உச்சம் பெற்று சுபக்கிரகம் சம்பந்தப்படாமல் பாவக்கிரகங்கள் சம்பந்தப்பட்டு பிறப்பு ஜாதகத்தில் அமையும் போது ஏழரைச்சனி ,அஷ்டம சனி மிக கடுமையான தீய பலன்களை தரும்.
பிறப்பு ஜாதகத்தில் சனி வலிமை குறைந்திருந்தால் ஏழரைச்சனி பெருமளவு கெடுதல் புரிவதில்லை பூர்வ புண்ணியம் வலுத்து இருப்பவர்களையும் ஏழரைச்சனி பெருமளவு பாதிப்பதுஇல்லை.
ஜனன ஜாதகத்தில் சனியை குருபார்த்திருக்க அமைந்தவர்களுக்கும் ஏழரைச்சனி பாதிப்பது இல்லை.
உபஜெய ஸ்தானமான 3, 6 ,10 ,11 ம் பாவத்தில் சனி பிறப்பு ஜாதகத்தில் அமர்ந்திருந்து அங்கு அவர் லக்ன யோகாதிபதிகளின் சாரத்தில் அமர்ந்து சுபக்கிரகங்களின் தொடர்பை பெறும் போது எதிர்ப்புகளை சமாளித்து ,தடைகளை தகர்த்தெறிந்து ,கடும் உழைப்பால் ,வியர்வை சிந்தி, தர்ம நியாயங்களுக்கு கட்டுபட்டு ,தன்னுடைய சுய முயுற்சியால் முன்னுக்கு வருவார்கள். இவர்களையும் ஏழரைச்சனி, அஷ்டம சனி பாதிப்பது இல்லை.
அஷ்ட வர்க்கத்தில சந்திரனுக்கு 12, 1, 2 அதிக பரல்கள் இருந்து அங்கு சனிவரும்காலம் ஏழரைச்சனி பாதிப்பை தருவதில்லை.
ஒரு 80 வயதான பெரியவரிடம் ஏழரைச்சனி ,அஷ்டம சனி நடக்கும் போது எப்படி தப்பிப்பது என்று கேட்டபோது
“சனிக்கும் செவ்வாய்க்கும் நேரடி பகை.” போ ! போயி முருகப்பெருமானிடம் சரணடைந்து விடு.உன்னைய சனிபகவானால ஒன்றும் செய்ய முடியாது போ! என்றார்
எனக்கு அதில் உண்மை இருப்பதாகவே தோன்றியது.
சனி பிறப்பு ஜாதகத்தில் 1,5,9 போன்ற திரிகோணங்களில் அமையும் போது ஊழ்வினை குற்றங்களால் ,பிதுர் வகை சாபங்களால்,பூர்வ ஜென்ம பாவங்களால் ஏழரைச்சனி, அஷ்டம சனி காலங்களில் அதிகமான துன்பங்களை அடைவார்கள்.பூர்வீக சொத்துக்கள் இழப்பு, பூர்வீகத்தை விட்டு வெளியேறி பிழைக்க வேண்டி வரும். பிறப்பு ஜாதகத்தில் சனி ஐந்தில் இருந்தால் ,தனித்து இருந்தால் போன ஜென்மத்தில் அதிகமாக பாவம் செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
அதுவே அந்த சனி புதன்,சுக்கிரன், குரு போன்ற சுபர்களோடு சம்பந்தப்படும் போது இது பொருந்தாது…
ராசிக்கு பன்னிரண்டில் ,ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் போது புத்தியை மழுங்கடித்து, யோசிக்க விடாமல் செய்து தவறு செய்து விடுவார்கள். தன்னோட புக்தியே ஜாதகனிடம் இருக்காது..
நல்ல திசாபுக்தி கள் நடக்கும் போது ஏழரைச்சனி யில் வீடு கட்டுவது,தோட்டம் வாங்குவது, திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு கடன் வாங்க வைப்பார்.
பொதுவாக ஏழரைச்சனி, அஸ்டமச்சனி காலங்களில் துன்பங்களை தந்து, நல்லவர் யார்?
கெட்டவன் யார் என உணரவைத்து,நல்ல புக்தி தெளிவையும், ஞானத்தையும்,, வாழ்க்கையை பற்றிய சரியான புரிதல்களையும் ஏற்படுத்தி புடம் போட்ட தங்கமாக ஜாதகனை ஜொலிக்க வைப்பார்.
கஷ்டம்னா என்னன்னே தெரியாத ஒருத்தன்கிட்ட ஒரு 10,00,000 (பத்து லட்சம்) ரூபாய் பணத்தை கொடுத்தா என்ன செய்வான்?
ஊதாரித்தனமாக ,ஆடம்பரமாக, வெட்டித்தனமாக ,பணத்தோட்தோட அருமை தெரியாம,தாராள மனசாக பணத்தை தண்ணிராக செலவு செய்து கொடை வள்ளல் என பெயரெடுப்பர்.
அதுவே ஏழரைச்சனி, அஷ்டம சனிக்கு பிறகு புத்திசாலித்தனமாக
சிக்கனமாக, யாரையும் நம்பாமல் பட்டை தீட்டிய வைரமாக ஜொலித்து பத்து இலட்சத்தை 1000 இலட்சங்களாக மாற்றி காட்டுவார்கள் சனி மஹாதிசை, ராகு மஹாதிசை, சூரிய, சந்திரர்கள் தசை போன்ற தசைகளில் கடுமையான பலன்கள் இருக்கும். ஏழரைச்சனி நடக்கும் போது சந்திரதசை நடந்தால் உயிரிழப்புகளும்,பொருள் இழப்புகளும் கட்டாயம் இருக்கும். இதற்கு பரிகாரமாக சிவபெருமானுக்கு பால்,இளநீர், பன்னீர் அபிஷேகங்கள் திங்கட்கிழமை யில் செய்ய வேண்டும்.. ஏழரைச்சனி, அஷ்டம சனியில் சிலருக்கு கர்மம் செய்ய வைக்கிறது. அப்போது அவருக்கு கர்மாதிபதி தசையோ அல்லது புக்தியோ ,அந்தரமோ நடந்து கொண்டு இருக்கும்.
ஏழரைச்சனி, அஷ்டம சனியில பேராசையை தரும். அதற்கு இடம் தராமல் புதியதாக பெரிய மூலதனம் போட்டு தொழில் செய்யாமல்
இருப்பதையே கையில் இருந்து போகாமல் இருக்க வழிதேடிக்கொள்ளுங்கள்…. கையில் இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ளுங்கள் ..
ஒருசிலர் ஏழரைச்சனியில் கடனை உடனை வாங்கி அகலக்கால் வைத்து பிரம்மாண்டமாக வீட்டை கட்டுவார்கள்..
அப்போது அவருக்கு பாவத்தன்மை பெற்ற 6,8,12 ம் அதிபதியின் தசையும் நடப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்..
இவர் வாங்கிய கடன் வட்டி போட்டு, வட்டி குட்டி போட்டு கடைசியில் தீராக்கடன்காரனாகி கடைசியில் இவர் வாங்கிய ,கட்டிய வீட்டை விற்று தனது கடனை அடைக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவதையும் சிலரது ஜாதகத்தில் நாம் பார்க்கிறோம்.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்த்தோமானால் ஏழரைச்சனியில் கிடைத்த எதுவும் நிலைக்காது என்ற விதிப்படி பாவத்தன்மை பெற்ற 8,12 ம் அதிபதியின் தசாபுக்தியில் கிடைத்த வீடோ,பொருளோ,செல்வமோ அதில் ஏதாவது குறையோ,அல்லது அதில் ஏதாவது வம்பு, வழக்கு ,கோர்ட், கேசு என அலைய வைக்கிறது..
ஏழரைச்சனியில் ஒருவர் ஓடி ஓடி சொத்து வாங்குகிறார் என்றால்,ஏழரைச்சனியில் ஒருவருக்கு பதவி உயர்வு கிடைக்கிறது என்றால், ஏழரைச்சனியில் ஒருவர் வெளிநாடு போய் நன்றாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்றால் அவருக்கு 1,5,9,10 ம் அதிபதியின் தசை நடக்கிறது என்று அர்த்தம்.. சுய ஜாதகத்தில் சனி அதிக சுபத்தன்மை அடைந்து உள்ளது என்று அர்த்தம். லக்னாதிபதி வலுவாக உள்ளார் என்று அர்த்தம்.. வெறும்கண்ணால் காணக்கூடிய ஒளிக்கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன் மிக வலுவாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.