Forum
ஜோதிடப்படி சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வீடு மனை வண்டி வாகனம் வாங்க முடியுமா? அட்லீஸ்ஸ்ட் சேமிக்கும் பணம், கடைசிவரை தனக்கு உதவுமா?
Quote from Sri Ramajeyam Muthu on October 8, 2020, 5:31 amமிடில் கிளாஸ் மனிதனின் சராசரி வாழ்க்கை எப்படி உள்ளது? படிப்பு வேலை, திருமணம்,குழந்தை மற்றும் தன்னுடைய காலத்திற்குள்ளாக தனக்கென ஒரு சொந்த வீடு, வண்டி வாகனம், கொஞ்சம் பேங்க் பேலன்ஸ் என எண்ணுவது தான், ஒரு சராசரி மனிதனின் எண்ண ஓட்டம்.
இதில் வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவை அவர்களுடைய 4ஆம் பாவகம், செவ்வாயை வைத்து எந்த அளவு கிடைக்கும் என்பதை அறிய முடிந்தாலும், சேமிப்பு எந்த அளவு இருக்கும் என்பதையும் அறிய வேண்டும்.
இதில், இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு, கூடுதலாக நிச்சயம் இரட்டை சுமையே.
இதனால் பலரது கனவு, கனவாகவே போய்விடுகிறது.
பொதுவாக ஒரு ஜாதகத்தில் தன ஸ்தானம் என்னும் இரண்டாம் அதிபதியும், லாப ஸ்தானம் என்னும் 11ஆம் அதிபதியும் ஜாதகத்தில் சுப வலுவுடன் இருக்கும் பொழுது, பண வரவில் பற்றாக்குறை இருக்காது.
ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் என்பது பூர்வ புண்ணியம், அதாவது நாம் முற்பிறவியில் சேர்த்து வைத்துள்ள. கர்ம பலன்களின் தொகுப்பைத் குறிக்கும் இடம்.
ஜாதகத்தில் இந்த ஐந்தாம் இடம், என்பது சேமிப்பு ஸ்தானம் எனப்படும்.
ஒரு தொழில் செய்கிறோம். ஏன் செய்கிறோம்? லாபம் பெற வேண்டும் என்பதற்காகத் தானே.
லாபத்தை அப்படியே எடுத்து செலவழித்து விடக்கூடாது என்பதை அறிவுறுத்தும் விதமாக, அதற்கு 7ம் இடம் சேமிப்பு ஸ்தானமாக ஜாதகத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
இதை இன்னொரு விதமாகவும் எடுத்துக்கொள்ளலாம். சேமிப்புடன் சிக்கனமாக வாழ்பவர்களுக்கு என்றுமே பெரிய அளவில் துன்பம் ஏற்பட போவதில்லை.
25 வயதில் வேலைக்குச் சென்றவுடன், சிறுக சிறுக சேமித்து, 60 வயதிற்கு மேல் அந்தப் பணம் தன்னுடைய பின்னாளில் பயன்படுமா என்பதை 5-ஆம் இடத்தையும் 9-ஆம் இடத்தையும் வைத்து அறியமுடியும்.
ஒன்பதாம் இடம் என்பது ஒரு மனிதன் அனுபவிக்கும் பாக்கியத்தை குறிப்பது.
பெற்ற மகனையே நம்ப முடியாத இந்த காலத்தில், ஒவ்வொருவரும் தமக்கு பின்னாளில் தேவையானதை சிறிதளவு சேர்த்து வைத்துக் கொள்வது நல்லது.
இதை இன்னொரு விதமாகவும் எடுத்துக்கொள்ளலாம் 5-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம்.
5-ஆம் அதிபதி கெட்டு,5மிடமும் கெட்டால் பிள்ளைகளால், பின்னாளில் பெரிய உதவி இருக்காது.
ஜாதகத்தில் 2,5,9,11 குரு, வலு இழந்தவர்கள், முடிந்தவரை தன் இளமை காலத்தில் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை சேமிப்பாக சேர்த்து வைத்து கொள்வது கண்டிப்பாக நலம் பயக்கும்.
இல்லையேல், கடைசி காலகட்டங்களில் திசாபுத்தி,கோட்சாரத்தை பொருத்து, முதியோர் இல்லத்திலோ, முட்டுச்சந்திலோ, முடங்கிக் கிடக்க நேரிடும். கவனம்.
நமக்கென்று நாலு காசு இருந்தால், நன்மைகளை எதிர்பார்க்க முடியும். இல்லையென்றால்😳😳😳😳
உங்கள் கைகளில் நிலையான சேமிப்பு இருந்தால், யாருக்கும் சோப்பு போடாமல், மாப்பு வைக்க முடியாது ஆப்பு என்று டாப்பாக வாழலாம்.
ஓம் நமசிவாய
மிடில் கிளாஸ் மனிதனின் சராசரி வாழ்க்கை எப்படி உள்ளது? படிப்பு வேலை, திருமணம்,குழந்தை மற்றும் தன்னுடைய காலத்திற்குள்ளாக தனக்கென ஒரு சொந்த வீடு, வண்டி வாகனம், கொஞ்சம் பேங்க் பேலன்ஸ் என எண்ணுவது தான், ஒரு சராசரி மனிதனின் எண்ண ஓட்டம்.