Forum

Please or Register to create posts and topics.

ஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும்? யார் ஜோதிடராக முடியும்? ஜோதிடர் அவர்கள் ஆவதற்கான கிரக நிலை என்ன?

இறைவனுக்கு அடுத்தபடியாக ஜோதிடரை தெய்வக்ஞன் என அழைக்கின்றனர்.

சிலநேரங்களில் மருத்துவரை விட, ஜோதிடரை மற்றொரு தெய்வமாகவே மக்கள் பார்க்கின்றனர் .

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினுள் உயர்ந்த கலையாக ஜோதிடக்கலை போற்றப்படுகிறது.

படைத்த பிரம்மனை தவிர மற்றொருவரின் தலைவிதியை எடுத்துச் சொல்லும் உன்னத அமைப்பு ஜோதிடருக்கு மட்டுமே உரித்தானது .

இன்றைய அறிவியல் எவ்வளவு உயர்ந்தாலும், எதிர்காலத்தை அறிய இறைவன் அனுமதிப்பதில்லை.

ஒருவனுக்கு வரக்கூடிய நல்ல ,தீயவைகளை அச்சமின்றி ஆணித்தரமாக உரைப்பது ஜோதிடம் மட்டுமே.

இத்தகைய உன்னத ஜோதிடக் கலையை குறையின்றி கற்று பலன் சொல்வதற்கு இறைவனின் பரிபூரண அருள் தேவை.

ஜோதிடம் தெரிந்துகொண்டவர்கள் அனைவருமே, நிச்சயமாக கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே.

பட்டங்கள் பல பெற்றாலும், மிகுந்த நுண்ணறிவு கொண்டிருந்தாலும் சிலருக்கு ஏட்டளவில் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள மட்டுமே முடியும்.

இறைவனின் பூரண ஆசியும் ,நம் தாய் தந்தை மற்றும் முன்னோர்கள் செய்த நல்ல கர்மவினையின் அடிப்படையிலேயே ஒருவருக்கு ஜோதிட ஞானம் சித்திக்க பெறும் .

சென்ற பிறவியில் விட்டகுறை தொட்டகுறை இல்லாமல் ஒருவர் ஜோதிடராக முடியவே முடியாது.

ஜோதிடம் ஒருவர் கற்க வேண்டும் எனில் அவருடைய சுய ஜாதகத்தில் புதன் நன்கு வலிமை பெற்றிருக்க வேண்டும்.
(ஆட்சி,உச்சம்,திக் பலம், புதன் நீச பங்கம்,வர்க்கோத்ததம், பெற்று சுப கிரக பார்வையில் மறையாமல் இருக்க வேண்டும்)
அதே நேரத்தில் புதன் மட்டுமே நன்றாக இருப்பதால் மட்டும் ஒருவர் ஜோதிடராக முடியாது .

புரியும்படி சொன்னால் ஜோதிடத்திற்கு அதிபன் புதன். புதன் வலுப்பெற்றவர்கள் மட்டுமே ஜோதிடராக முடியாது .

ஏனென்றால் புதன் வலுப்பெற்றால் அவர்கள் ஜோதிடம் கற்றுக் கொண்டு ஏட்டளவில் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.
முதலில் கூறியது போல் இது தெய்வீக கலை.
இது தெய்வீக கலையைக் கற்பதற்கு ஜோதிடத்தில் புதனும், குருவும், கேதுவும் வலுப்பெற்றிருக்க வேண்டும். இவர்கள் மூவரும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று லக்னாதிபதி சம்பந்தபட வேண்டும்.

சிலர் கோயில் அர்ச்சகராக இருப்பார் ஆனால் ஜோதிடம் தெரியாது .ஆனால் ஜோதிடம் தெரியாது.
சிலர் நன்கு படித்தவராக இருப்பார் ஆனால் ஆன்மீக விஷயங்களில் அவ்வளவு நாட்டம் இருக்காது .

இது இரண்டும் இருந்தாலும் சிலருக்கு ஞானம் சித்திக்காது.
புதன் +குரு+ கேது இம்மூன்றும் லக்னாதிபதியுடன் ஏதாவது ஒருவித தொடர்பு கொண்டவருக்கே ஜோதிடம் கைவரப்பெறும் .

அவர்களே முழுமையான ஜோதிடர். புதன் குரு கேது இவற்றின் முக்கூட்டு கலவையே ஜோதிடத்தின் ஆரம்ப அடிநாதம் மெத்தப் படித்த மேதாவிகளுக்கு கூட ஜோதிடம் வருவதில்லை.
இந்தப் பதிவைப் படித்து கொண்டிருப்பவர்களில் பலபேர் இன்ஜினீயராகவோ, டாக்டராகவோ முதுகலை பட்ட படிப்பை முடித்தவராகவோ இருக்கலாம் .
ஆனால் நிறைய படித்த பலபேர் என்னிடமே லக்னம் என்றால் என்ன என அப்பாவியாக கேட்டோர் பலர் உண்டு.

புதன் ஏட்டளவில் ஜோதிடத்தை கற்பதற்கு உறுதுணை செய்யும் .நன்றாக கணக்கிடலாம் ,நுட்பமாக ஆராயலாம் புதனின் பங்கு தியரி மட்டுமே.
இதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால் தொலைதூரக் கல்வியில் நீச்சல் பழகுவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டு கிணற்றில் குதித்த கதை போல் ஆகிவிடும்.
என்னுடைய குருநாதர் மணி அய்யா கூறியது போல் ஒருவன் 12 மணி நேரம் 300 வருடங்கள் ஜோதிடம் கற்றாலும் சரியான பலனை சொல்லவே முடியாது. 70 முதல் 80 சதவீதம் வரை மட்டுமே சரியான பலனை சொல்ல முடியும் அது யாராக இருந்தாலும் சரி.

ஆயுள் கணிதமே இதற்குச் சான்று.

பூரண சரணாகதி பெற்ற, இறைவனின் அனுக்கிரகம் பெற்ற, தொழிலில் நேர்மையான நல்ல எண்ணத்தோடு ,முக்காலத்திலும் இறைவனை முழுமனதாக வேண்டி ,எந்தவித லாப நோக்கில்லாமல் இறைவனை சரணடைந்து ,நீயே அனைத்தும் என பலன் சொல்லுபவருக்கு ஜோதிடம் பிடிபடும் .சற்று அகந்தை மேலோங்கினாலும் சரித்து விடும்.

ஜோதிடர் ஆவதற்கு விதிகள் என்ன என இணையத்தில் ஆயிரம் விதிகள் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொது பலனே.

குரு ,கேது ,புதன் மூவரும் ஐந்தாமிடத்தில் அல்லது ஒன்பதாமிடத்தில் அமையப் பெற்று (அதாவது திரிகோண ஸ்தானங்களில் )லக்னாதிபதி ஏதோ ஒருவித தொடர்பு பெற்று இந்த திசைகள் நடைமுறைக்கு வந்தால் நிச்சயமாக ஜோதிடம் பிடிபடும் .

(இதோடு அவர்கள் சுய ஜாதகத்தில் வாக்கு ஸ்தானாதிபதியும் ,தொழிலில் கொடிகட்டி பறக்க பத்தாம் அதிபதியும் அதன் மூலம் நல்ல லாபம் சம்பாதிக்க 11ஆம் அதிபதியும் வலுப்பெற்றிருக்க வேண்டும் இது தொழில்முறை ஜோதிடருக்கு பொருந்தும்) நல்ல தசா புத்தி நடைமுறையில் இருக்க வேண்டும்.

சிலர் ஜோதிட ஆர்வலர் ஆக இருப்பர் அவர்களுக்கு இந்த கிரகத்தின் அளவு கொஞ்சம் குறைவாக இருக்கும்.

நான் பார்த்த வரையில் மிதுன,கன்னி லக்னத்தில் புதன் இருக்கப் பெற்றவர்களுக்கு ஓரளவு ஜோதிட ஞானம் சித்திக்கிறது.

ஏட்டளவில் இறை நம்பிக்கை இல்லாமல் ,இறைவனின் அனுக்கிரகம் இல்லாமல் சொல்லப்படும் பலன்கள் ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் க்ளோஸ் என்ற அமைப்பில் இருக்கும் .

உங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு நீங்கள் செய்யும் எந்த ஒரு காரியமும் நிச்சயம் நல்ல பலன் அளிக்கும்.

சும்மாவா சொன்னார்கள். ஜோதிடம் ஒரு கடல் என்று.

ஓம்நமசிவாய

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More