Forum

Please or Register to create posts and topics.

மங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை பிரிப்பது எப்படி?

ஜோதிடத்தில் நவகிரகங்களின் ஒட்டுமொத்த திசையையும் கூட்டினால் 120 வருடம் என்று வருடம் வரும்.

இன்றைய காலகட்டங்களில் எந்த ஒரு மனிதனும் 120 வருடம் வாழ வாய்ப்பே இல்லை.

அத்திப் பூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக 100 வயதை உலக அளவில் சிலர் மட்டுமே தொழுகின்றனர்.

90 வயது கடந்தவரை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

90 வயது வரை ஒரு மனிதன் வாழ்ந்தால் அவன் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை ஏழரை சனியை சந்தித்திருப்பார்.

இதில் மங்குசனியை எப்படி பிரிப்பது, பொங்கு சனியை எப்படி பிரிப்பது என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது.

பொதுவாக 30 வயதிற்குள் வரும் ஏழரைச் சனி முதல் சுற்று மங்கு சனி ஆக கணக்கிடப்படும்.

இங்கு தான் ஒரு பிரச்சனை உள்ளது.

உதாரணமாக ஒருவர் இன்றைய நாளில் ஏழரை சனியில் பிறக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தற்போது நிலையில் தனுசு ராசி என்றும் வைத்துக்கொள்வோம்.

தனுசு ராசியை பொறுத்தவரை இன்றைய தேதியில் இருந்து, இன்னும் இரண்டு வருடம் மட்டுமே ஏழரை சனி இருக்கும்.

இதை முதல் சுற்றாக எடுப்பதா அல்லது முப்பது வருடம் கழித்து முழுமையாக 71/2 வருடம் வரும் காலத்தை முதல் மங்கு சனியாக எடுப்பதா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.

தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

முழுவதும் ஏழரை வருடம், ஏழரைச் சனியை அனுபவித்து இருந்தால் மட்டுமே அது முதல் சுற்று மங்கு சனி ஆக கணக்கிடப்படும்.

மேற் சொன்ன உதாரணத்தில் தனுசு ராசியில் இன்று பிறக்கும் ஒரு குழந்தை, இன்னும் இரண்டு வருடத்திற்கு ஏழரைச்சனியில் தான் இருக்கும்.

முப்பது வருடம் கழித்து, முழுமையாக ஏழரை சனி வரும்பொழுது அது இரண்டாவது சுற்று பொங்கு சனியாக அதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

முழுவதும் ஏழரை வருடம் முழுமையாக ஏழரை சனியை கடந்து இருந்தால் மட்டுமே அதை முதல் சுற்று மங்கு சனியாக கணக்கிலெடுக்க வேண்டும்.

7 வருடம் முழுமையாக இருந்தாலும் உதாரணமாக இன்றைய நாளில் கும்பராசியில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் கிட்டத்தட்ட ஏழு வருடம் ஏழரை சனி இருக்கும். அதை முதல் சுற்றாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

சிலர் முதல் சுற்று மங்கு சனி மிகவும் மந்தமாக இருக்கும், இரண்டாவது சுற்று பொங்கு சனி பொங்கும் என்று தவறாக குறிப்பிடுகின்றனர். அது தவறு.

சில ஜோதிடர்கள் இரண்டாவது சுற்று ஏழரை சனி நன்றாக இருக்கும் என்று தவறான வழி காட்டி விடுகின்றனர்.

அதனால் சிலர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையில் தத்தளிப்பதும் இந்த காலகட்டம்தான்

ஏழரைச் சனி, அட்டமச் சனி எந்த காலகட்டங்களில் வந்தாலும் மனத்துயரை கண்டிப்பாக கொடுக்கும் சனிக்கு நிகர் சனியே.

ஜாதகத்தில் யோக திசைகள் நடந்தால் கெடுபலன் குறைவாக இருக்கும் அவ்வளவே.

மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்று பிரிப்பது எல்லாம் வீண்.

சனி எந்த காலகட்டங்களில் வந்தாலும் அப்பொழுது நடக்கும் தசா புத்திகளின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப நல்ல திசை நடந்தால் கெடுபலனை குறைத்தோ, அல்லது கெடு திசைகள் நடந்தால் வைச்சு செய்தே செல்லும்.

இரண்டு ஏழரைச்சனியை முழுமையாக கடந்த அனுபவத்தில் கூறுகிறேன்.

பொங்கு சனி எல்லாம் பொங்காது.

இரண்டாவது சுற்று 71/2 சனி

உங்களைப் பொங்க வைத்து, பொங்கல் வைத்து விட்டுத்தான் போகும். பொறுப்புடன், பொறுமையாக புத்திசாலித்தனமாக அதை கடந்து செல்லுங்கள்.

ஓம் நமசிவாய

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More