Forum

Please or Register to create posts and topics.

யாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திருமணம் செய்யக்கூடாது?

பொதுவாக ஏழரைச் சனி, அட்டம சனியில் திருமணம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒருமுறை தான் நம் கலாச்சாரத்தின் படி திருமணம் நடக்க வேண்டும்.

பொதுவாக ஏழரைச் சனியோ, அஷ்டமச் சனியோ வயதுக்கு ஏற்றபடி பிரச்சினையைக் கொடுக்கும்.

4 வயது குழந்தைக்கு, உடல்நிலை அடிக்கடி பாதிப்படையும்.

40வயதில் குடும்பம், வேலை சார்ந்த விஷயங்களில் பிரச்சினையைக் கொடுக்கும்.

இதே அமைப்பில், ஒரு ஜாதகத்தில் களத்திர தோஷம் உடையவருக்கு, திருமணம் செய்து வைத்தால் கண்டிப்பாக ஏழரை சனியோ, அட்டமச் சனியோ முடிவதற்குள் திருமணம் சார்ந்த விஷயங்களில் கண்டிப்பாக பிரச்சினையை கொடுக்கும்.

களத்திர தோஷம் உடைய ஜாதகங்களில், திருமணம் சார்ந்த பிரச்சனைகள் (விவாகரத்து போன்றவை) ஏழரைச் சனி அட்டமச் சனியில் தான் வெளிப்படுகின்றன.

இதைப் பல ஜாதகங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது.

சரி, ஏழரை சனி, அஷ்டம சனியில் களத்திர தோஷம் இல்லாத ஜாதகத்தில் திருமணம் செய்யலாமா?

ஜாதகத்தில் களத்திர தோஷம் இல்லை என்றாலும், அட்டமத்து சனியில் திருமணம் செய்வது நல்லதல்ல.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் சிலருக்கு ஆரம்பத்திலேயே வெறுப்பு தோன்றலாம்.

இரண்டரை வருடம் மட்டுமே அஷ்டம சனி என்பதால், ஓரளவு பொறுத்துக் கொள்ளலாம்.

(வீடு கட்டுதல், திருமணம் செய்து வைப்பது, தொழில் தொடங்குவதை தவிர்க்கலாம்).

சரி ஏழரைச்சனியில் திருமணம் செய்யலாமா? செய்யலாம். களத்திர தோஷம் இல்லை என்றால்

ஏழரைச் சனியில் களத்திர தோஷம் இல்லாத நிலையில், திருமணம் செய்தால் ஜாதகருக்கு எந்த மாதிரியான பிரச்சினையைக் கொடுக்கும்?

களத்திர தோஷம் இல்லாத ஜாதகருக்கு ஏழரை சனியில் திடீரென குடும்பத்தில் சில குழப்பங்கள், வேலையில் பிரச்சனை, வேலைப்பளு, இடமாற்றம் போன்றவை ஏற்படும்.
சிலருக்கு வேலை பறிபோகும்.

திருமணமான புதிதில் ஆணும், பெண்ணும் கோயில், சினிமா, தியேட்டர் ஹோட்டல், ஷாப்பிங் சென்றுவர ஆசைப்படுவர்.

மேற்சொன்ன சிலவற்றை அனுபவிக்க முடியாமல் போகலாம்.

வேலை இழக்கும் பொழுது பணப்பற்றாக்குறை ஏற்படும். எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும். வெளியூரில் வேலை பார்த்தால், அன்பு இருந்தாலும் அனைத்தும் பேச முடியாது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை.

ஜாதகத்தில் இருவருக்கும் நல்ல தசாபுத்திகள் சென்று கொண்டிருந்தால், பெரிய அளவு பயப்படத் தேவையில்லை.

மற்றபடி இருவருக்கும் ஜாதகத்தில் கடுமையான களத்திர தோஷம் இருப்பவர்கள், கண்டிப்பாக ஏழரை சனி, அஷ்டம சனியில் திருமணம் செய்யவே கூடாது. செய்தால், சில இடங்களில் பாத்திரங்கள் பெளன்ஸ்சர்களாக வரும். சமாளிக்க தெரிந்தால் சந்தோஷமாக வாழ முடியும்.
இல்லையென்றால் கல்யாணம் ஆகாமல் மொட்ட பையன் ஆகவே இருந்திருக்கலாம் என்று புலம்பித் திரிய தோன்றும். கவனம்.

ஓம் நமசிவாய

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More