Forum

Please or Register to create posts and topics.

வேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று நன்கு சம்பாதிக்கும் மனைவி யாருக்கு அமையும்? அதற்கு உண்டான கிரக நிலைகள் என்னென்ன?

தற்போதுள்ள ‌‌கடுமையான பொருளாதார சூழ்நிலையில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று சம்பாதித்தால் தான் வாடகை, கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.

தற்போதுள்ள விஞ்ஞான யுகத்தில் ஆணுக்கு நிகராக பெண்களும் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். சில குடும்பங்களில் கணவனை காட்டிலும் மனைவி அதிகமாகவே சம்பாதித்து தனது குடும்பத்தை பொருளாதாரத்திலும், சமூக அந்தஸ்திலும் உயர்ந்து நிற்க காரணமாக உள்ளார்கள்.

சில நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு எடுப்பதையே அதிகமாக விரும்புகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று சிந்தித்து பார்த்தோமானால் அவர்களின் நேர்மை, உழைப்பு, நேரம் தவறாமை, வேலை நேரத்தில் டீ சாப்பிட, தம்மடிக்க என்று ஓ.பி.அடிக்க மாட்டார்கள் என்பது மிக முக்கியமான காரணங்கள். அதைவிட முக்கியமான காரணம் யூனியன் சேர்த்து கொண்டு நிறுவனத்துக்கு எதிராக போராட மாட்டார்கள் என்பதும் முதலாளிகளின் எண்ணமாக உள்ளது.

வேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று சம்பாதிக்கும் மனைவியை அடைந்திருக்கும் கணவன்மார்களின் ஜாதகத்தில் நான்காம் இடம் அதிக வலுப்பெற்று இருக்கும். நான்காம் பாவகத்தில் சுபக்கிரகங்கள் சம்பந்தப்பட்டு இருக்கவேண்டும்.

ஏழாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புகொள்ள , பரிவர்த்தனை செய்து கொள்ள உத்யோகம் பார்க்கும் மனைவி மற்றும் தனது தொழிலுக்கு உதவியாக இருக்கும் மனைவி அமைவாள்.

ஏழாம் பாவகம் மனைவி ஸ்தானம் ஆகும். அந்த ஏழுக்கு பத்தாம் இடம் நான்காம் இடம் ஆகும். நான்காம் இடம் என்பது மனைவியின் தொழிலை குறிக்கும். நான்காம் பாவகத்தில் சுபகிரகங்கள் வீற்றிருந்து, எட்டாம் பாவகத்தில் சுபக்கிரகங்கள் அமர்ந்தோ பார்த்தோ இருக்கும் ஜாதகர்களுக்கு மனைவியர் அதிகமாக சம்பாதிப்பார்கள்.

ஏழாம் இடம் சுபத்தன்மை அடைந்து, ஏழாம் அதிபதியும் சுபத்தன்மை அடைந்து, சுக்கிரன் ஆட்சி உச்சமாக கேந்திர திரிகோணத்தில் அமரப்பெற்ற ஜாதகர்களுக்கு மனைவி வந்தபிறகு வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகும்.

ஏழாம் இடத்திற்கு குருபார்வை இருந்து, ஏழாம் அதிபதிக்கு குருபார்வை இருந்து மனைவி காரகன் சுக்கிரனுக்கு குருபார்வை இருந்து, ஏழாம் அதிபதி தன் வீட்டுக்கு கேந்திர திரிகோணத்தில் அமர்ந்து, லக்னாதிபதியும் வலுத்து, நல்ல தசாபுக்திகளும் நடைமுறையில் இருந்தால் நல்ல அழகான குணவதியை அடைந்து, மனைவியின் சொத்துக்களை அடைந்து, வாழ்நாள் முழுவதும் மனைவி மற்றும் மாமனார், மாமியார் உதவி ஆதரவுகளை பெற்று வாழ்வின் மிக உன்னதமான நிலைக்கு செல்பவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்களுக்கு மனைவி அமைந்தது இறைவன் கொடுத்த வரமாகும்.

மனைவி வந்ததுக்கு பிறகு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More