கன்னி ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
கன்னி ராசி அன்பர்களே
( உத்திரம் 2,3,4 அஸ்தம் சித்திரை 1,2)
குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
வாக்கியப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி (28.10.2019) திங்கட்கிழமை 54.14 நாழிகை (இரவு 03:52) அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
திருக்கணிதப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (04.11.2019) திங்கட்கிழமை (57.56 நாழிகை) விடியற்காலை 05:17 அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
கன்னி ராசி (50%): (சுமாரான பலன்கள்)
கடந்த ஒரு வருடமாக மூன்றாமிடத்தில் இடத்தில் குருபகவான் இருந்து
“தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்” – ஜோதிடப் பாடல்
“தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு மூன்றில் தார்வேந்தர் பகையும் உண்டு ரோகமுண்டு” – புலிப்பாணி பாடல்
என்பதற்கிணங்க நம்மை சுற்றியுள்ள உற்றார், உறவுகள், நட்புகள், பதவி, பணம் முதலிய படைகள் அழிந்து, பொருள் விரயம் ஏற்பட்டு இப்படி
பல விதமான சங்கடங்களை அனுபவித்திருப்பீர்கள்
இனி அடுத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கு பெயர்ச்சியாகி
“தர்மபுத்திரன் நாலிலே வனவாசம் படி போனதும்” என்றப் பாடலின் படி
நாலாம் இடம் எனப்படும் மனை வீடு வீடு வண்டி வாகனம் சுகம் தாய் கல்வி இந்த வகையில் தொந்தரவுகளை பிரச்சனைகளை சந்திப்பீர்கள்
குருபகவான் பெயர்ச்சியாகி
🌸ஐந்தாம் பார்வையாக உங்கள் அட்டம ஸ்தானம் எனப்படும் 8-ஆம் இடத்தையும்
🌸ஏழாம் பார்வையாக உங்கள் கர்ம ஸ்தானம் ஸ்தானம் எனப்படும் 10-ஆம் இடத்தையும்
🌸9-ஆம் பார்வையாக உங்கள் அயன சயன போக ஸ்தானம் எனப்படும் 12-ஆம் இடத்தையும் பார்க்க இருக்கிறார்
நிதிநிலை :
தேவைக்கு தகுந்த அளவில் மட்டுமே நிதி நிலைமை வரவு உண்டாகும். இக்காலகட்டத்தில் சேமிப்புகள் குறையும் எதிர்பார்த்த தொகைகள் வருவதில் தடை தாமதங்கள் உண்டாகும் லாபகங்களும் சீராக மட்டுமே இருக்கும் எதிலும் திட்டமிட்டு செலவு செய்ய சிறப்பு தேவையற்ற முதலீடுகளை தவிர்க்க வேண்டிய காலம் நீண்ட கால முதலீடுகள் உண்டாகும்
உத்தியோகம்/ தொழில்/ வியாபாரம்:
குரு பகவான் உங்கள் பத்தாம் இடத்தை பார்வை இடுவதால் புதிய மாணவ மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகள் உடனடியாக கிடைக்கும் ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருந்த உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கௌரவப் பதவிகள் கிடைக்கும் காலகட்டமும் பணி மாற்றமும் இடமாற்றம் உண்டாகும்
வியாபாரம் தொழில் செய்பவர்கள் தொழிலில் நல்ல வருமானம் வசதிகள் கிடைக்கும் வியாபாரம் தொழில் பெருகும் உற்பத்தி அதிகரிக்கும் வியாபாரத்தை தொழிலை விரிவுபடுத்த வேண்டிய காலகட்டம் எனவே திட்டமிட்டு விரிவுபடுத்திக் கொள்ளலாம் புதுவகையான தொழிலில் ஈடுபட உகந்த காலகட்டம்
புதிய பொருட்கள் விற்பனை செய்யும் காலகட்டம் புதிய ஒப்பந்தங்கள் மூலம் விரிவாக்கம் செய்யலாம் வெளிநாட்டு வியாபார ஒப்பந்தங்கள் உண்டாகும் காலகட்டம் ஏற்றுமதி தொடர்பான வியாபாரம் சூடுபிடிக்கும் காலம்
திருமணம் , குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் :
திருமணம் தடைபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் நடந்தேறும் குழந்தை பாக்கியம் ஏற்படும் நீண்ட நாள் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் தலை தூக்கிக்கொண்டே கொண்டே இருக்கும் குடும்ப வாழ்வில் கசப்பான அனுபவங்களை சந்திக்கும் காலகட்டம் உடல் நலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் சுகம் கெடும்
வீடு வண்டி வாகனம் :
புதிய வீடு வண்டி வாகனங்கள் வாங்குவதை தள்ளிப் போட வேண்டிய காலகட்டம், இருக்கும் சொத்தில் பல பிரச்சனைகள் தொந்தரவுகள் ஏற்படும் சிலருக்கு இருக்கும் சொத்துக்கள் விற்கவேண்டிய காலகட்டம் உண்டாகும் அல்லது நெருக்கடி ஏற்படும் வண்டி வாகன பயணத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் வண்டி வாகனங்களால் விபத்துகள் ஏற்பட கூடிய காலகட்டம்
மாணவ மாணவியர்கள்:
இந்த ஆண்டு மேற்படிப்பு படிக்கும் மாணவ மாணவியர்கள் மிகுந்த கவனமாக எச்சரிக்கையாக படிக்க வேண்டிய காலகட்டம் மற்றவர்களும் கவனமாக படிக்க வேண்டிய காலகட்டம்
விவசாயிகளுக்கு:
இந்த ஆண்டில் விவசாயம் மத்திமமாக இருக்கும் புதிய விவசாய நிலங்களை வாங்குவதில் கவனம் தேவை விளைச்சல் குறையும் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம்
பெண்களுக்கு :
உடல் நல பாதிப்புகள் குறையும் வேலை பார்க்கும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பலவித தொந்தரவுகள் ஏற்படும் உயரதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக வேண்டிய காலகட்டம் எனவே கவனமாக செயல்படவும்
மற்ற பலன்கள்:
எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம்
தாய்க்கு பிரச்சனைகள் உண்டாகும்
கல்வியில் குறைபாடுகள் ஏற்படும்
வீடு வண்டி வாகனத்தில் பிரச்சனைகள் ஏற்படும்
பரிகாரம்:
🍥 குருமார்கள் அல்லது சித்தர்களின் வழிபாடு வியாழன் தோறும் செய்து வர சிறப்பு
🍥 குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம்
🍥 அடிக்கடி திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்ய சிறப்பு
முக்கிய குறிப்பு:
மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுவானவையே மற்ற கிரக பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகள் மற்றும் கிரக சேர்க்கைகள் பொருத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆகையால் புதிய முயற்சிகள் அல்லது முடிவுகள் எடுக்கும் பொழுது அருகில் உள்ள ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு தெளிவான முடிவுகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Comments are closed.