2019 குரு பெயர்ச்சி பலன்கள் மகர ராசி
மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள் – 50/100
மகர ராசிக்கு குருபகவான் 3க்கு அதிபதியாகவும், 12க்கு அதிபதியாகவும் வருவார்.
இதுநாள் வரை ஏழரை சனி நடக்கும் பொழுது லாப ஸ்தானமான 11-ஆம் இடத்தில் குரு இருந்தபோது கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப்போல பணவரவை ஓரளவு வழங்கி இருப்பார்.
கோட்சாரத்தில் 12 ராசிகளில் முதன்மையாக நன்மையை பெறும் ராசி, சிம்ம ராசி என குறிப்பிட்டு இருந்தேன்.
அதற்கு எதிர்மறையாக 12 ராசிகளில் மிகவும் எச்சரிக்கையாக கவனமுடன் இருக்க வேண்டிய ராசி மகர ராசி என்றால் அதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஒரு ஜோதிடன் நடுநிலையாளராக செயல்பட வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன். கெட்டதையும் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
குரு மகர ராசிக்கு தற்போது 12 ஆம் இடத்தில் ஆட்சி பெறுவதால் சுபகாரியங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
அதாவது இதை எப்படிப் புரிந்து கொள்ளலாம் என்றால், 100 ரூபாய் சம்பாதிக்றோம். ஹோட்டலில் போய் அந்த நூறு ரூபாய்க்கு வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது பணம் இருக்காது. இருந்தாலும் ஒரு மனதிருப்தி. நாம் சம்பாதித்தோம். நாம் சாப்பிட்டோம் என்று.
அதே 100 ரூபாயை நீங்கள் சம்பாதித்து, தொலைத்து விட்டீர்கள் என்றால் 2 மணி நேரம் எரிச்சல் கொடுக்கும்.
அதே 100 ரூபாயை ஒருவருக்கு கடனாக கொடுத்து, (தானமாக அல்ல) அதை திருப்பித் தராமல், அல்லது தருகிறேன், தருகிறேன் என்று இழுத்தடித்துக் கொண்டிருந்தால் உங்கள் மன நிலைமை எப்படி இருக்கும். யோசித்துப் பாருங்கள்.
ஆதலால் விரையம் என்று ஆகிவிட்டது. அதை சுப விரயமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
ஏழரைச் சனியில் ஜென்ம சனியும் நடக்க உள்ளதால் மிக மிக மிக என எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள்.
புதிய தொழில் முதலீடுகள் தற்போதைக்கு வேண்டவே வேண்டாம்.
வாழ்க்கை வழி தவறும் காலம் என்பதால் மிகவும் விழிப்புடன் இருங்கள்.
கண்டிப்பாக யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். கொடுத்தால் நீங்கள்தான் கட்ட வேண்டும். அது ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பராக இருந்தாலும் பரவாயில்லை.
குரு தற்போது 12-ம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் சுப கடன்களை நம் வருமானத்திற்கு ஏற்ப, விரலுக்கு ஏற்ற வீக்கம் போல் அளவோடு வங்கியில் வாங்கிக்கொள்ளுங்கள். அகல கால் வைத்தால் கடனை அடைப்பது சிரமமாகிவிடும்.
4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உடல் நிலை சீராக இருக்கும்.
இந்த நிலைமையும் மாறும் என்பதை போல மாணவர்கள் தங்கள் லட்சியத்தை நோக்கி மட்டுமே பயணப்பட வேண்டும். வேறு எதிலும் மனதைச் செலுத்துவது கூடாது. காதல் கனியாது. கவனமாய் இருங்கள். பெற்றோரின் அறிவுரையை மட்டும் கேட்டு நடங்கள்.
மகர ராசிக்கு அடுத்த சில வருடங்கள் கொஞ்சம் எச்சரிக்கையான காலகட்டமாகவே உள்ளது.
சுய ஜாதகம் வலுத்து இருப்போர் பயப்படத் தேவையில்லை.
14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பண விஷயத்தில் கவனம் தேவை.
அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல் 10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.
இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.
30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பணவரவு உண்டு. 1 .6 .2020 வரை இந்நிலை நீடிக்கும்.
தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழரைச் சனியுடன் தொடர்வதால் இன்னும் சில காலங்களுக்கு கொஞ்சம் பொறுமையுடன் இருப்பது நல்லது.
பரிகாரம்:
வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
திருச்செந்தூர் முருகனை தினசரி நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வரவும்.
Comments are closed.