குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 சிம்ம ராசி
(மகம்,பூரம், உத்திரம் 1)
குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் கார்த்திகை 5 (20.11.2020) வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
தற்போது உங்கள் ராசிக்கு குரு பகவான் 5 ஆம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகி 6 மிடம் என்று சொல்லக்கூடிய ருண ரோக சத்ரு சர்வீஸ் ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார். இது மோசமான இடமாகும்.
“கேளப்பா ஆறுக்கு தோஷமுண்டு தார்வேந்தர் பகை உண்டு, ரோகம் உண்டு என்பார்” – புலிப்பாணி பாடல்
இந்தப் பாடலின் பொருள் யோகங்கள் எதிர்மறையாகச் செயல்படும் எதிரி கடன் வைத்தியச் செலவு களவு திருடு ஏமாற்றம் இழப்புகள் ஏற்படலாம்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 6 மிடத்தில் இருந்து
உங்கள் ராசிக்கு 10 மிடம் கர்ம ஸ்தானம் கவுரவம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 12 மிடம் அயன சயன போகம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 2 மிடம் தனம் குடும்பம் வாக்கு என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்.
நிதி நிலைமை:
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தை குரு பகவான் பார்வை விழுவதால் தேவையான அளவு கையில் பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். செலவுக்கு தகுந்த வரவுகள் உண்டாகும்.இந்த காலகட்டத்தில் தேவையில்லாத முதலீடுகளை தவிர்க்க வேண்டிய காலகட்டம் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் பெரிய பணப்புழக்கம் கள் இருக்காது சேமிப்புகள் கூட வாய்ப்பில்லை.
திருமணம் குழந்தை பாக்கியம் குடும்பம் :
உங்கள் ராசிக்கு 2-ஆம் இடம் ஆகிய குடும்ப ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தேவையில்லாத பிரச்சனைகள் தீரும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரும் காலம் கட்டம் நீண்டநாள் திருமணத்துக்காக தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் அமையும் சந்தான விருத்தி உண்டாகும் நீண்ட நாள் குழந்தை பாக்கியத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் கால கட்டம். வாரிசுகள் ஏற்படும் காலம்.
கடன் நோய்கள் உடல் ஆரோக்கியம்:
உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குருபகவான் வருவது உடல் நலத்தில் பாதிப்புக்களையும் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் அடுத்த ஓராண்டு உடல் நலத்தை காத்துக் கொள்வது அவசியமான காலகட்டமாகும். கடன் பிரச்சினைகள் அதிகரிக்கும் எதிரி தொந்தரவுகளில் உருவாகும் இழப்புகள் ஏற்படும் காலகட்டம் எனவே கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் வியாபாரம் வேலை வாய்ப்பு:
உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அமையும் நீண்ட நாள் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அமையும் புதிய வேலைக்கு செல்லும் காலகட்டம் இடமாற்றங்களும் அமையும் கௌரவப் பதவிகள் வந்து சேரும் பூர்வீகத்தில் அல்லது ஊர் நிர்வாகத்தில் புதிய பதவிகள் கௌரவப் பதவிகள் வந்து சேரும்.
தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு இந்த காலகட்டத்தில் தொழிலில் உற்பத்தி அதிகரிக்கும் வியாபாரம் கூடும் புதிய தொழில்நுட்பங்களில், கண்டுபிடிப்புகளில் நன்மைகள் ஏற்படும் புதிய வகையான பொருட்களை உற்பத்தி செய்யும் காலகட்டம் புதிய புதிய ஆர்டர்கள் வந்து சேரும் புதிய வாடிக்கையாளர்கள் அமையும் காலகட்டம் தொழில் நிறுவனத்தை அல்லது வியாபாரத்தை விரிவுபடுத்த திட்ட அறிக்கை மட்டும் தகுந்த துறை வல்லுனர்களுடன் ஆராய்ந்து செய்யப்பட வேண்டிய காலகட்டம். பெரும் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது அல்லது தகுந்த வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மேற்கொள்வது சிறப்பு.
வீடு வண்டி வாகன வசதிகள்:
ஏற்கனவே இருக்கும் வண்டி வாகனங்களை மாற்றும் காலகட்டம் வீடு கட்டும் ஆலோசனைகளில் மிக கவனமாகவும் சிரத்தையுடனும் செய்ய வேண்டிய காலகட்டம் தேவையில்லாத அகலக்கால் வைப்பதைத் தவிர்க்கலாம் கடன் வாங்கி வீடு கட்டுபவர்கள் மிக மிக கவனத்துடன் செயல்பட வேண்டிய காலகட்டம் தேவையில்லாத அல்லது அளவுக்கு அதிகமான விஸ்தரிப்பு கள் செய்வதை தவிர்க்கலாம் மராமத்து வேலைகளை அவசியம் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டிய காலகட்டம்.
மாணவ மாணவியர்களுக்கு:
ஆரம்பக் கல்வி படிக்கும் மாணவ மாணவியர்கள் எளிதாக தேர்வில் வெற்றி பெறும் காலகட்டம் நல்லபடியாக படிப்புகள் அமையும். மேல் படிப்பு படிப்பவர்கள் மிக கவனத்துடனும் சிரத்தை யுடன் படிக்க வேண்டிய நாளை கட்டம். வெளிநாடுகளில் படிக்க திட்டமிட்ட மாணவர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு படிப்பில் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். .
பெண்களுக்கு:
வேலையில் உள்ள பெண்களுக்கு விரும்பிய பதவி மாற்றங்கள் இடமாற்றம் அமையும் புதிதாக வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் காலகட்டம் புதிய வேலை வாய்ப்புகள் வந்துசேரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த வேலைகளில் சேரும் காலம் இருக்கும் வேளையில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் பணிச்சுமையும் கூட வாய்ப்புண்டு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விவசாயிகளுக்கு:
மகசூல் அதிகரிக்கும் தன வரவுகள் உண்டாகும் எதிர் பார்த்து இருந்த கடன் அடையும் தேவையில்லாத புதிய கடன்களை வாங்குவது தவிர்க்க வேண்டிய காலகட்டம் அரசியல் உதவிகளில் இழுபறி உண்டாகும் உரிய நேரத்தில் உதவிகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும்.
பொதுவான பலன்கள்:
எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம்.
இழப்பீடுகளை தவிர்க்க ஒன்றுக்குப் பலமுறை யோசித்து செயல்பட வேண்டும்.
பண விஷயங்களில் ஜாமீன் கையெழுத்து இடுவதில் கவனம் தேவை.
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.
தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டிய காலகட்டம்.
கொடுக்கல் வாங்கலில் மிக மிக கவனம் தேவை.
உடல்நலனில் மிக மிக கவனம் தேவை.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்து வழிபட உடல் ஆரோக்கியம் கடன் பிரச்சனைகள் நீங்கும்.
வியாழக்கிழமை தோறும் நவகிரகத்தில் உள்ள குருபகவான் வழிபாடு.
குருமார்களுக்கு வஸ்திரதானம்.
மேற்கண்ட பலன்கள் யாவும் பொதுவானவையே உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள் பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும் எனவே சுபகாரியங்களை அல்லது புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது உங்களுடைய ஜோதிரிடம் அல்லது என்னிடத்தில் கலந்தாலோசித்து செய்வது சிறப்பைத் தரும்.