கடகம் ராசி மே மாத ராசி பலன்கள் 2020
தனது வசீகரப் பேச்சால் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் மனநிலை காரகன் சந்திரன் பகவானை கடக ராசி அன்பர்களே!
மே 1 ஆம் தேதி கடகத்தில் ஆட்சி பெற்றிருந்த ராசிநாதனாகிய சந்திரன் பகவான் மே மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் சிம்மம் வீட்டில் வாசம் செய்கிறார்.
இதனால் இந்த இரண்டாம் இடத்திற்கு இடம் பெயர்ந்து, அதன் அதிபதியான சூரியன் உச்சம் பெற்றிருப்பதாலும் ராசியை நீசபங்க பெற்ற குரு பகவான் பார்வை பெறுவதாலும் இந்த ராசிகளுக்கு எவ்வித குறைவில்லாமல் தனபுழக்கம் கிடைக்கும்.
ராசிக்கு 5 -க்கு கூடிய செவ்வாய் மே 3ஆம் தேதி கும்ப வீட்டுக்கு சென்று மறைவதாலும், புத்திரகாரகன் குரு நீசம் பெற்று இருப்பதாலும் புத்திர பேருக்காக காத்திருக்கும் பெண்களுக்கு உகந்த மாதமல்ல.
பிள்ளைகளுடைய கல்வி விஷயங்களில் இந்த மாதம் தடை உண்டாகலாம்.
தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் அதன் அதிபதியான சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் தாங்கள் மேற்கொண்ட தொழில் வெற்றி அடையலாம் அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கும்.
உங்களது ராசிக்கு 12ல் ராகு பகவான் அமர்ந்து ராசிக்கு ஆறாமிடத்தில் சனி +கேது இணைந்து பார்வை பெறுவதால் அன்னிய தேசத் தொடர்பு, அந்நிய லாபம் போன்றவை உருவாகலாம்.
உங்கள் ராசிநாதன் இருக்கு லாபத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் மே 3ஆம் தேதி மிதுன வீட்டிற்கு சென்று மறைவதால் உலகத்தில் தடை ஏற்படலாம். பிணி பீடைகள் உருவாகலாம்.
உங்கள் ராசிக்கு 3, 12-க்குடைய புதன் பகவான் மே 4 ஆம் தேதி ரிஷப வீட்டுக்கு வருவதாலும் நீச பக்கம் பெற்ற குரு பகவானின் பார்வையை பெறுவதால் கீர்த்தி, புகழ் மற்றும் அந்தஸ்து உருவாகும்.
மே 15 மற்றும் 16 ஆம் தேதி உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சி, வெளியூர் செல்லுதல் மற்றும் சுப காரியங்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் நல்லது.
இந்த மாதம் முழுவதும் ஸ்ரீ அம்பாளை வழிபட நல்லது நடக்கும்.