மகரம் ராசி மே மாத பலன்கள் 2020

0 538

எதையும் விடாமுயற்சியுடன் பொறுமையாக தொடர்ந்து முயன்று வெற்றி பெறும் மகரராசி அன்பர்களே !

இந்த மாதம் உங்கள் ராசிநாதன் சனிபகவான் விய ஸ்தானத்தில் ஞானகாரகன் கேது பகவானுடன் இணைந்து அமர்ந்து இருப்பதால் ஆன்மீக சாதனையில் ஈடுபடக்கூடிய நண்பர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக மாதமாக கிரகசூழல் அமைந்திருக்கிறது.

மாதத்தின் தொடக்கத்தில் சுக, லாபாதிபதியான செவ்வாய் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று மூன்று மற்றும் பன்னிரண்டுக்குடைய குரு பகவான் உடன் இணைந்து குருவை நீச பங்கம் செய்வதால் சுக மற்றும் லாப விஷயங்களையும் கீர்த்தி மற்றும் புகழ் அந்தஸ்து தந்துகொண்டிருக்கிறது.

மே மாதம் மூன்றாம் தேதிக்கு பிறகு செவ்வாய் பகவான் கும்ப வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைந்து சனியின் பார்வையை பெறுகிறார்.ஆதலால் வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் சனியின் பார்வையைப் பெறுவதால் நீங்கள் நல்லதே நினைத்து சொன்னாலும் அது மற்றவர்களுக்கு தவறாக போய் முடிந்து விடும். இந்த மாதங்களில் பொது இடங்களில் நின்று தேவையில்லாத வீண் வாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்தல் நல்லது.

இம் மாத தொடக்கத்தில் வித்தைக்காரன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் உச்சம்பெற்ற சூரியன் உடன் இணைந்து புத ஆதித்ய யோகம் பெற்று திகழ்வதால் கல்வி- கேள்விகளில் ஈடுபடக்கூடிய மாணவர்களுக்கு உகந்த மாதமாக அமையும் .

மேலும் மே மாதம் 4 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் பெற்ற சூரியனை விட்டுப் பிரிந்து உங்கள் ராசிக்கு திரிகோண ஸ்தானமான ஐந்தாம் வீட்டுக்கு செல்கிறார். நீசம் பெற்ற குரு பகவானுடைய பார்வை பெறுவதால்‌ பார்வை பலன் குறைவு எனினும் தான் மேற்கொண்ட வித்தையில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பைப் பெறலாம்.

மே மூன்றாம் தேதி வரை ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்று இருந்த சுக்கிர பகவான் , ஆறாம் வீட்டிற்கு சென்று ராகுவுடன் இணைகிறார். எனவே களத்திரகாரகன் சுக்கிரன் பகவான் ராகு‌ மற்றும் கேது பிடியில் மாட்டிக் கொள்வதால் புதிதாக திருமணம் முயற்சியில் ஈடுபடக்கூடிய இளைஞர்களுக்கு இந்த மாதம் உகந்த மாதமாக இல்லை.

இல்லற வாழ்வில் ஈடுபட்டு கொண்டிருக்கும் கணவன்- மனைவிகள் உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்து சனியின் பார்வையும் பெற்று மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ராகுவுடன் ஆறாமிடத்தில் இணைந்து இருப்பதால் தேவையில்லாத வீண் பிரச்சினைகள் உருவாகலாம். நிலைமையை உணர்ந்து விட்டுக்கொடுத்தல் நல்லது.

மகர ராசி அன்பர்களுக்கு மே மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதி உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுதல், சுபகாரியங்கள் செய்தது வெளியூர் செல்வதால் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களை தவிர்த்தல் நல்லது.

உங்களுக்கு ஏற்படும் இனன்னல்களில் இருந்து விடுபட அருகில் உள்ள பிள்ளையாரை வழிபட்டால் மனகஷ்டங்கள் விலகும்.

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More