மீனம் ராசி மே மாதம் பலன்கள் 2020
கம்பீரமாக எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் குருபகவான் லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் மாத தொடக்கத்தில் அதாவது மே இரண்டாம் தேதி வரை உச்சம் பெற்ற செவ்வாயுடன் நீசபங்கம் பெற்று இருந்தாலும் ,
மே மாதம் மூன்றாம் தேதிக்கு பிறகு செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் தனித்து நீசம் பெறுவதால், லக்னாதிபதி நீசம் என்ற வகையில் இந்த மாதம் லக்கனாதிபதி பலம் பெற உங்கள் கையில் அணிந்து இருக்கும் போது கனக புஷ்பராகம் கல்லை அணியலாம். வியாழன்தோறும் குரு பகவானை வழிபடுங்கள் குருவுக்கு உகந்த கொண்டைக் கடலையை அவித்து தானம் செய்யுங்கள்.
உங்கள் ராசிக்கு ருண, ரோக ,பிணி மற்றும் பீடைகள் தரக்கூடிய சூரிய பகவான் உச்சம் பெற்று இரண்டாம் இடத்தில் இருப்பதாலும்,தனகாரகன் குரு நீசம் பெற்று இருப்பதாலும் தனாதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருந்தாலும் பகை ஸ்தானமாகிய சனி வீட்டில் குடியேறி இருப்பதால் பணப்புழக்கம் குறைந்து விடும்.
உங்கள் ராசிக்கு 4 7-க்குடைய புதன் பகவான் மே நாலாம் தேதி ரிஷப வீட்டிற்கும், 3 ,8 க்கு உடைய சுக்கிர பகவான் மே 3ஆம் தேதி மிதுன வீட்டிற்கு இடப் பெயர்ச்சி அடைகிறார்.
மே மாதம் மீன ராசிக்கு பகைக் கிரகமான சூரியனும் ,சுக்கிரனும் பலம் பெற்று நிற்பதாலும் உங்கள் இராசிக்கு நட்பு கிரகமான செவ்வாய் ,குரு பலம் இழந்து இருப்பதாலும் இந்த மாதம் மீன ராசிக்கு உகந்த மாதமாக அமையவில்லை.
இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக அமைய வியாழன்தோறும் குரு பகவானுக்கு காயத்திரி மந்திரம் சொல்லி தட்சிணாமூர்த்தியை வழிபட இன்னல்களிலிருந்து விடுபடலாம்.