மீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022

0 588

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 1ம் தேதி ( சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி) செவ்வாய் கிழமையும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 23ம் தேதியும் (புரட்டாசி 7) புதன் கிழமை பெயர்ச்சி ஆகிறது.

இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ஒன்னறை வருடம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன்களைத் தரக்கூடிய இந்த ராகு கேது பகவான் 2022ம் ஆண்டு பிலவ வருஷத்தில் பங்குனி மாதம் 7ம் தேதி வரை ராகு கேது முறையே ரிஷபம், விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார்கள்.

உங்கள் ராசிக்கு முயற்சி வீரியம் இளைய சகோதரம் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய மூன்றாம் இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

  • முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும் காலகட்டம்
  • இளைய சகோதர வழியில் இருந்த பிரச்சனைகள் தீரும்
  • அடிக்கடி பயணங்கள் ஏற்படும் கால கட்டம்
  • குழந்தை பாக்கியம் உண்டாகும்
  • எதிர்பார்த்துக் கொண்டிருந்த நன்மைகள் அனைத்தும் நடக்கும் காலகட்டம்
  • திடீர் ஆதாயங்கள் வந்து சேரும்
  • சேமிப்புகள் உயரும்
  • திருமணத் தடைகள் நீங்கும்
  • குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்
  • மிக மிக சிறப்பான காலகட்டம்

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானம் என்று சொல்லப்படும் 9-ஆம் இடத்திற்கு கேது பெயர்ச்சியாகிறார்.

  • தெய்வீக பயணங்கள் தரிசனங்களில் உண்டாகும் தீர்த்த யாத்திரைகள் ஏற்படும்
  • பூர்வீகத்தில் இருந்த சொத்துப் பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கைக்கு வரும்
  • குருமார்களின் அருள் கிடைக்கும்
  • தந்தை வழியில் ஆதரவுகள் பெருகும்
  • நினைத்த காரியங்கள் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றிபெறும்
  • நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் காலகட்டம்
  • நீண்ட கால வழக்குகள் முடிவுக்கு வரும்

பரிகாரம் :

  • குலதெய்வ, முன்னோர் வழிபாடு, குளக்கரையில் ராகு கேதுவுடன் உள்ள விநாயகப்பெருமான், நாகர் வழிபாடு செய்ய சிறப்பு
  • யானைக்கு ஒருமுறை கரும்பு கட்டு வாங்கித்தர சிறப்பு
  • மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்களே உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை தசா புக்தி மற்ற கிரக பெயர்ச்சிகளைப் பொருத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்.
  • எனவே புதிய காரியங்களை அல்லது நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முடிவுகளை எடுக்கும் பொழுது உங்களுடைய ஜோதிடரை அல்லது என்னை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து முடிவு எடுப்பது சிறப்பைத் தரும்

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More