ரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020

விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் ரிஷப ராசி

இந்த வருடம் நவம்பர் 5ஆம் தேதி வரை குரு பகவான் உங்களுடைய ஏழாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருக்கிறார் எனவே இந்த காலகட்டம் வரை சிறப்பான காலமாகும்.

பணவரவுகள் நன்றாக இருக்கும்

தொழில் வியாபாரம் உத்தியோகத்தில் லாபங்கள் அதிகரிக்கும். வேலையில் விரும்பிய இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் சம்பள உயர்வுகள் கிட்டும் காலம்.தொழில் வியாபாரம் விரிவாக்கம் புதிய முதலீடுகள் இக்காலகட்டத்தில் நடக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சனி பகவான் பெயர்ச்சி வரை திடீர் திடீரென்று தொழிலில் முடக்கம் மந்தம் உண்டாகி கொண்டே இருக்கும்

குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சரியாகும்

திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு சித்திரை வைகாசியில் திருமணங்கள் நல்லவிதமாக முடியும் காலம் அல்லது நல்ல வரன்கள் முடிவாகும்

மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும் விரும்பிய படிப்புகள் மேற்படிப்பு களும் ஆராய்ச்சி படிப்புகள் கிடைக்கும்

ராகு பகவான் இரண்டாம் இடத்திலும் கேது பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் மற்றும் சனி பகவான் தை 10 ஆம் தேதி வரை 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்

பொய்களை பேசுவது தவறான வாக்குறுதிகள் கொடுப்பது தவிர்க்க வேண்டிய காலங்கள்

கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்

பணம் கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

மர்ம உறுப்புகளில் நோய்கள் அல்லது பிரச்சனைகள் அல்லது அறுவை சிகிச்சைகள் ஏற்படும்

இடுப்பு சம்பந்தப்பட்ட வலி வேதனைகள் உண்டாகும் காலம்

வாகன பயணங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் குறிப்பாக இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது

மனைவியின் உடல் நலத்தில் சிறுசிறு பிரச்சினைகள் மருத்துவச் செலவுகள் ஏற்படும்

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

உடல் நலத்தையும் மன நலத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்

கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்

அடுத்தவருக்கு ஜாமீன் தேவையற்ற வாக்குறுதிகள் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

புதிய முயற்சிகளில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் அல்லது தவிர்க்கலாம்

ஜனவரி 26 க்கு பிறகு உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்கிறது அக்காலகட்டங்களில் எல்லாவிதமான சுப காரியங்கள் சுப நிகழ்வுகள் நடக்கும்

பரிகாரம்

குலதெய்வ இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம்

வியாழக்கிழமைதோறும் நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கிட்டு வழிபட சிறப்பு

சனிக்கிழமை தோறும் நவகிரகத்தில் உள்ள சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்ற சிறப்பு

ஊனமுற்றவர்களுக்கு அல்லது தொழிலாளர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்வது சனி பகவான் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்

மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்

எனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு

❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்

விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2019

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More