சனிபெயர்ச்சி மீனம் ராசி 2020 – 2023

0 1,569

சனி உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் ஆட்சி பெற்று (உங்கள் ராசி, 5, 8 ) ஆகிய இடங்களை பார்வை மூலம் பார்த்து பலனை தருவார்.

சனி தான் உங்கள் ராசிக்கு எதிலும் #வெற்றி பெற வைக்கும் கிரகம், அதே சமயம் #விரையாதிபதியும் கூட.

இந்த முறை விரைய ஸ்தானத்திற்கு மறைவு பெற்று #வீண் செலவுகளை இல்லாமல் செய்வார்.

அதே விரையாதிபதி ஆட்சியாகவும் இருக்க போவதால் #வரவுக்கும்_செலவுக்கும் சரியாக இருக்கும்.

என்னங்க குழப்புகிற மாதிரி இருக்கிறதா, திரும்ப படியுங்கள், பிடிபடும்.

அதாவது இதுவரை பலரும் தொழிலிலோ, வேலையிலோ #பிச்சை என்கிற நிலை தான் இருந்து இருக்கும், கடந்த மூன்று ஆண்டுகள் மேலாக.

இந்த காலகட்டத்தில் எங்கேயாவது #கடனை ஏற்படுத்தி இருப்பீர்கள், அதனை இனி வரும் காலங்களில் அடைக்க போறிங்க.

வரும் பணம் கடனுக்கு, புரிகிறதா, வரவுக்கும்—செலவுக்கும் கணக்கு.

இன்னும் ஒரு படி மேலாக ஏற்கனவே பட்ட கடனுக்கு((( அல்லது))) இனி வரும் மூன்று ஆண்டுகளுக்குள் இதை செய்தால் தான் உண்டு என்ற அடிப்படையில் பணம் வருவதற்கும் போவதற்கும் சமமாகும்.

அது, எந்த மாதிரியான நல்லது என்றால், இனி வரும் மூன்று ஆண்டுகளுக்கு.

வீடு கட்ட முடியும்

பாதி நிலையில் உள்ள வீட்டை புதுப்பிக்க இயலும்

வாகனம் வாங்கி தொழில் செய்ய இயலும்

கல்வி லோன் அடை படும், அதற்காக வேலை கிடைக்கும்

வம்பு, வழக்கு,கடன் பைசல் ஆகும்

வெளி நாடு பணம் கட்டி போவதால் வேலை கிடைக்கும் , அதற்கு வாங்கும் கடனுக்கு போகும் பணம்.

வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது

முதலில் திருமணம் நடக்கும்

உயர் கல்விக்கு பணம் கட்டி பட்டம் பெறுவது

சொந்த தொழிலுக்கு முதலீடு போடுவது

அசையா சொத்துக்கள் வாங்குவது

இது போன்ற நல்வைகள் இப்போது நடக்கும், ,உறுதி.

வேலை வாய்ப்பு பிரச்சினை தீர்ந்து கூடுதல் வேலை கிடைத்தாலும் நீடித்த அமைப்பாக கிடைக்கும், அதன் மூலம் பண வருவாய் வரும்.

பலருக்கும் அடகு போயிருக்கும் #தங்க_நகை , இனி திருப்ப இயலும்.

அரசு வேலையோ, வெளி நாடோ, தனியார் துறையோ, சுய தொழிலோ எதுவானாலும் தாராளமாக நல்ல படியாக அமையும், கவலை வேண்டாம்.

என்ன பிரச்சினை இருந்தாலும், தீர்வு கிடைக்கும், உங்களுக்கு ஏற்றவாறு.

இரண்டாம் திருமணம் செய்ய இருப்பவர்களுக்கு அதற்கு உண்டான சூழ்நிலை அமைந்து நடக்கும்.

மூத்த சகோதரர் மூலம் நல்லது நடக்கும், புதிய வேலைக்கு பலரும் போவீர்கள் அதனால் ஆரம்பத்தில் #சம்பளம் குறைவு போல தோன்றினாலும் மாதம் மாற மாற கூடுதலாக வரும், சனி என்றாலே slow தானே.

குறிப்பாக, தங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலமாக அமையும்.

எந்த வேலை கிடைக்கிறதோ அதில் முதலில் சேருங்கள், வேலையில் நல்ல ஒர்க்குகளை உங்களை நம்பி தருவார்கள் இனி.

வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது இட மாற்றம், உத்தியோக மாற்றம் நடக்கும், பணம் கூட வருவதற்கு தான்.

சிலர் தற்போது வேலையை இழந்து இருப்பீர்கள், அவர்கள் மீண்டும் இதை விட நல்ல வேலைக்கு போவதற்கு தான் இழந்தீர்களே தவிர , கெடுதல் இல்லை அதனால் .

அடுத்து. சனி உங்கள் ராசியை 3ம் பார்வையால் பார்க்க போவதால், எதிலும் இனி அவசரம் காட்ட மாட்டீர்கள். நிதான போக்கு காணப்படும்.

உடலால் அதிகம் உழைக்கும் படியாக தான் அமையும், உட்கார்ந்து சொகுசாக வேலை பார்க்க வாய்ப்பு குறைவு.

புத்திர பாக்கியம் கிடைக்கும். தடை இல்லை

எதையும் இழுத்து போட்டு வேலை செய்வீர்கள். அடிக்கடி உடல் சோர்ந்து காணப்படும்.

என்ன ஒரு குறை என்றால், பல விஷயங்களை மாற்றி புரிந்து கொள்வீர்கள் (இந்த சனி பெயர்ச்சி பதிவும் சேர்த்து).

எதிலும் இனி முந்திரிகொட்டையாக இருக்க மாட்டீர்கள். பணம் சேர்க்கும் முயற்சியில் இறங்க போறிங்க.

அடுத்து . சனி 5ம் வீட்டை நேர் பார்வையால் பார்க்க போவது #அதிர்ஷ்டத்தை நம்ப கூடாது, உழைப்புக்கு ஏற்ற பலனே கிடைக்கும்.

ஆறாம் அதிபதி நட்சத்திரத்தில், சனி, ஒரு ஆண்டுக்கு இருக்க போவதால், கடனை அடைக்கவும், நோய், பகையை விரட்டவும் இயலும், உங்களால்.

நீங்கள் நினைப்பது தற்போது பொறுமையாக ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும், கண்கூடாக.

அடுத்து. சனி 8ம் இடத்தை 10ம் பார்வையால் பார்க்க போவதால் , தலைமறைவு வாழ்க்கை இனி வாழ இயலாது.

வெளி நாடு செல்வோர் மட்டும் விசாரித்து விட்டு போவது நல்லது.

அசிங்கம், அவமானம், தலை குனிவு, கேவலம், திடிர் இழப்பு இது போன்றவைகள் இனி வராது.

தந்தை சொத்தை மட்டும் சிதைக்காமல் இருந்தாலே போதுமானது, மறை முகமாக வரும் பணத்திற்கு உத்திரவாதம் இல்லை.

வாழ்க்கை துணையிடம் பணத்தை தந்தால் எதற்காக இந்த பணம் என்று சொல்லி கொடுங்கள்.

பலருடைய வாழ்க்கை துனைக்கு #வேலை கிடைக்கும் அல்லது வேலைக்கு அவர்களாகவே செல்வார்கள்.

வாழ்க்கை துணை மீது இருந்த கடன் தீரும், நோய் குணமாகும்.

விளையாட்டு துறையினருக்கு நீங்கள் இருக்கும் டீம் வெற்றி பெறும், அல்லது நீங்கள் மற்றவர்களை தாண்டி சிறப்பாக செயல்படுவீர்கள்.

மீனம் வீரமாகும் இனி.
(நல்ல காலம் பயன்படுத்தி கொள்ளுங்கள், 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வாய்ப்பு இது).

பரிகாரம் குலதெய்வ வழிபாடு போதும், மற்றபடி நீங்களே எதையாவது ஒவர் brilliant ஆக செய்து சொதப்பாமல் இருந்தாலே போதுமானது.

important, தற்போது உங்களுடன் மிதுனம் கடகம் துலாம் மகரம் கும்பம் இந்த ராசிக்காரர்கள் இருக்குமேயானால், நான் சொன்ன இந்த #சனிபெயர்ச்சி நல்ல பலன் நடக்க தாமதமாகும் .

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More