செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 சிம்மம் ராசி November 11 முதல் December 25)

0 593

இந்த காலகட்டத்தில் 9ம் அதிபதி செவ்வாயும், 10ம் அதிபதி சுக்ரனும் பரிவர்த்தனை அமைப்பில் நன்மையும் பார்வை மூலம் யோகத்தையும் தருகிறார்கள்.

என்னையா நல்லது ஒன்றும் நடந்த மாதிரி இல்லை, இதிலே யோகம், பரிவர்த்தனை என கேட்கிறீங்களா.

உங்களுக்கு பொதுவாக லேட் ஆனாலே பிடிக்காது, எதிலும் எப்போதும்.

அதனால் எப்போதும் கிரகங்களை அவ்வளவாக பிடிக்காது.

போகட்டும், இந்த மாதம் முதல் ராசி நாதன் வலிமை அடைவதும் கூடுதல் நன்மையே.

உங்கள் பேச்சிற்கு தற்போது மரியாதை கிடைக்கும்.

நீங்கள் சொன்னதை மற்றவர்கள் நிறைவேற்றுவார்கள்.

பழைய ஆளுமை திரும்ப வரும்.

மதி நுட்பம் வெளிபடும்.

எந்த இடத்தில் நீங்கள் சென்றாலும், பேசினாலும் உங்கள் பெயர் நிலை நாட்டபடும்.

வேலையில் புதிய மாற்றம் மற்றும் அதன் மூலம் குடும்ப தேவைகள் நிவர்த்தி.

அரசு வேலைவாய்ப்பு அதிகம் உங்களுக்கு இந்த காலகட்டத்தில்.

சினிமா தொடர்புள்ள கலைஞர்களுக்கு வேலையில் நன்மை நடக்கும்.

சினி சான்ஸ் கிடைக்கும்.

பல விஷயங்கள் எதிர்பாராமல் நடக்கும்.

ஒட்டல், பெண்கள் சம்பந்தப்பட்ட பொருள் விற்பனையாளர்கள், Acting சம்பந்தப்பட்ட வேலை, ஆடை விற்பனை, மருத்துவ, காவல், அரசியல் நபர்கள் இவர்களுக்கு கூடுதல் நன்மையும் மரியாதையும் உண்டு, நிச்சயம்.

புதிய தொழில் தொடங்க போகிறீர்கள்.

கல்வி பாதிப்பு இல்லாமலும்,அடுத்த நிலைக்கும் செல்வது நடக்கும்.

கடன் அடைபடும்.

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More